அதிமுகவுடனான கூட்டணி முடிந்து விட்டது: வெங்கைய்யா
சென்னை:
தேர்தலோடு அதிமுக- பாஜக கூட்டணி முடிந்து விட்டது என்று அகில இந்திய பாஜக தலைவர் வெங்கைய்யாநாயுடு தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று நடந்த பாரதீய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் வெங்கையா நாயுடு, தமிழகபா.ஜ.க. தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், அகில இந்திய செயலாளர் இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன்,எச்.ராஜா, லலிதா குமாரமங்கலம் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்கப்பட்டது.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த வெங்கையா நாயுடு கூறியதாவது:
அதிமுகவுடன்- பாஜக கூட்டணி கூட்டணி தேர்தலுக்காக அமைக்கப்பட்டது. இப்போது தேர்தல் முடிந்து விட்டது.முதல்வர் ஜெயலலிதா இப்போது பல நடவடிக்கைகளை திரும்பப் பெற்றுள்ளார். இதை தேர்தலுக்கு முன்புசெய்திருந்தால் நல்ல பலன் கிடைத்திருக்கும். இனி அதிமுக அரசு நல்லது செய்தால் வரும் சட்டசபை தேர்தலில்ஆதரிப்போம்.
இந்தத் தேர்தலில் மாநில பிரச்சினைகள், தேசிய பிரச்சினையை அமுக்கி விட்டன. அதேநேரத்தில் தேர்தல்தோல்விக்கு மற்றவர்களை குற்றம் சாட்ட முடியாது. தோல்வியை மக்கள் தீர்ப்பாக பணிவுடன்ஏற்றுக்கொள்கிறோம். நாங்கள் வலிமை வாய்ந்த எதிர்க்கட்சியாக செயல்படுவோம். எங்களால் அடுத்த தேர்தலில்வெற்றி பெற முடியும்.
தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ஜெயலலிதா பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறுவதுதேவையில்லாதது.
தமிழக பாரதீய ஜனதா தலைமையில் மாற்றம் இருக்காது என்று கூறினார்.
தமிழகத்தில் ஏற்பட்ட தோல்விக்கு அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததுதான் காரணமா? என்று நிருபர்கள் மீண்டும்கேட்டதற்கு பதில் கூற வெங்கைய்யா நாயுடு மறுத்து விட்டார்.
அதிமுகவுடன் உறவு இல்லை: இல. கணேசன்
கூட்டத்துக்கு முன்னதாக, அதிமுகவுடன் உறவு நீடிப்பதாகக் கருதவில்லை என்று அகில இந்திய பாஜக செயலாளர்இல.கணேசன் கூறினார்.
அவர் கூறுகையில், தேர்தல் தோல்விக்குக் காரணம் அதிமுக அரசுக்கு எதிராக வீசிய அதிருப்தி அலைதான்.இதனால் பாஜகவுக்கு லேசான பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆனால் இதிலிருந்து நாங்கள் மீண்டு விடுவோம்.வருகிற சட்டசபைத் தேர்தலில் அசைக்க முடியாத ஒரு சக்தியாக பாஜக விளங்கும்.
தமிழகத்தில் எங்களது ஆதரவு இல்லாமல் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது. அதிமுகவுடன் எங்களதுஉறவு நீடிப்பதாக நான் நினைக்கவில்லை. தோல்விக்குப் பிறகு அதிமுகவைச் சேர்ந்த யாரும் எங்களைத் தொடர்புகொள்ளவில்லை, நாங்கள் அவர்களை தொடர்பு கொள்ளவில்லை.
யார் மீதும் வருத்தப்பட எங்களுக்குத் தோன்றவில்லை. நடந்தது நடந்து விட்டது, அதை மறக்கவே நாங்கள்நினைக்கிறோம். தமிழக பாஜக தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை மாற்றும் எண்ணம் கட்சிக்கு இல்லை என்றார்இல.கணேசன்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்!












Click it and Unblock the Notifications