24 புதிய கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் விவரம்
சென்னை:
தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர்களும், போலீஸ் துறை உயர் அதிகாரிகளும் அதிரடியாகமாற்றப்பட்டனர். அவர்களின் முழு விவரம் வருமாறு:
24 புதிய ஆட்சியர்கள்:
1. சென்னை: கண்ணுசாமி
2. திருவள்ளூர்: குமார் ஜெயந்த்
3. திருச்சி: பாண்டியன்
4. பெரம்பலூர்: விவேகானந்தன்
5. வேலூர்: கோபாலகிருஷ்ணன்
6. திருவண்ணாமலை: சத்யப்ரதா சாஹு
7. விழுப்புரம்: பாலச்சந்திரன்
8. புதுக்கோட்டை: ஜிதேந்திரநாத் ஸ்வாய்ன்
9. கரூர்: ராமமூர்த்தி
10. நீலகிரி: முத்துசுவாமி
11. கோவை: கோசலராமன்
12. சேலம்: சுகுமாரன்
13. திருவாரூர்: ஏகாம்பரம்
14. திண்டுக்கல்: முருகையா
15. ஈரோடு: கார்த்திகேயன்
16. நாமக்கல்: சேவியர் கிறிசோ நாயகம்
17. தர்மபுரி: ஆஷிஷ் வாச்சாணி
18. தஞ்சாவூர்: ராதாகிருஷ்ணன்
19. மதுரை: ராஜேந்திரன்
20. தேனி: சுநீல் பாலிவால்
21. திருநெல்வேலி: அதுல் ஆனந்த்
22. தூத்துக்குடி: சந்திரசேகரன்
23. சிவகங்கை: ஆனந்த ராவ் விஷ்ணு பாட்டீல்
24. ராமநாதபுரம்: செல்லமுத்து
போலீஸ் அதிகாரிகள் :
சென்னை காவல்துறை ஆணையராக இருந்த ஆர்.நடராஜ், தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.,யாகமாற்றப்பட்டுள்ளார். சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.,யாக இருந்த வெங்கடகிருஷ்ணன், உளவுப்பிரிவு கூடுதல்டி.ஜி.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
உளவுப்பிரிவு கூடுதல் டி.ஜி.பியாக இருந்த நடராஜன், சென்னை மாநகர காவல்துறை ஆணையராகநியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய சென்னை போலீஸ் இணை ஆணையரான எம்.கே.ஜா பெங்களூரில் உள்ள மத்திய தொழில்பாதுகாப்புப்படையின் டி.ஐ.ஜியாக மாற்றப்பட்டுள்ளார்., வடசென்னை இணை கமிஷனராக இருக்கும்சைலேந்திரபாபு மத்திய சென்னை இணை கமிஷனர் பொறுப்பையும் கவனிப்பார்.
தர்மபுரி மாவட்ட எஸ்.பியான பெரியய்யா, விழுப்புரம் மாவட்ட எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.
கோவை நகர துணை ஆணையர் ராஜேந்திரன் தர்மபுரி மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை ஆணையராக இருந்த ஆபாஷ் குமார், சேலம் நகர ஆணையராக மாற்ற்ப்பட்டுள்ளார். மதுரை லஞ்சஒழிப்புத் துறை எஸ்.பியாக இருந்த கந்தசாமி, திண்டுக்கல் மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரைபோலீஸ் துணை ஆணையராக இருக்கும் சுந்தரேசன், மதுரை மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பியாக பிரேம்குமாரும், டேவிட்சன் தேவாசீர்வாதம் கரூர் மாவட்ட எஸ்.பியாகவும்நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
திருச்சி குற்றம் மற்றும் போக்குவரத்து போலீஸ் துணை ஆணையர் ஆறுமுகம் புதுக்கோட்டை எஸ்.பியாகவும்,புதுக்கோட்டை எஸ்.பி. ஆனந்த் குமார் சோமானி, சிவகங்கை மாவட்ட எஸ்.பியாகவும், சென்னைவண்ணாரப்பேட்டை போலீஸ் துணை ஆணையர் தாமரைக்கண்ணன் திருச்சி மாவட்ட எஸ்.பியாகவும்நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி நகர போலீஸ் துணை ஆணையர் மகேஷ்வர் தயாள் நீலகிரி மாவட்ட எஸ்.பியாகவும் சென்னை மாநகரபோலீஸ் ஆணையர் அலுவலக துணை ஆணையர் பாஸ்கரன் திருவாரூர் மாவட்ட எஸ்.பியாகவும், சென்னைதலைமைச் செயலக பாதுகாப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயச்சந்திரன் விருதுநகர் எஸ்.பியாகவும்நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி நகர உதவி எஸ்.பி. சோனல் மிஸ்ரா, கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு உதவி எஸ்.பியாகவும்,தேவக்கோட்டை உதவி எஸ்.பி. பிரேம் ஆனந்த் சின்கா, திருச்சி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு உதவிஎஸ்.பியாகவும், ஊத்துக்கோட்டை உதவி எஸ்.பி அனிஷா உசேன் திருவள்ளூர் மாவட்ட மதுவிலக்குஅமலாக்கப்பிரிவு உதவி எஸ்.பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications