கருணாநிதியின் முத்து விழா: வி.பி.சிங் பங்கேற்பு
சென்னை:
சென்னையில் ஜூன் 3ம் தேதி நடைபெறவுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் 81வது பிறந்த நாள் முத்துவிழாவில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
காவிரிப் பிரச்சினை தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளாக தனது பிறந்த நாளை திமுக தலைவர் கருணாநிதிகொண்டாடவில்லை.இந் நிலையில் அவருக்கு ஜூன் 3ம் தேதி 80 வயது முடிந்து 81 வது வயது பிறக்கிறது.
முத்து விழா என்பதாலும், மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளதாலும், அதைபிரமாண்டமாகக் கொண்டாட திமுகவினர் முடிவு செய்துள்ளனர்.
இதையொட்டி சென்னை தீவுத் திடலில் ஜூன் 3ம் தேதி மாலை 6 மணிக்கு பிறந்த நாள் விழா நடைபெறுகிறது.இதில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பாமகநிறுவனர் டாக்டர் ராமதாஸ், கம்யூனிஸ்ட் தலைவர்கள் நல்லகண்ணு, வரதராஜன் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
இதற்கிடையே, அண்ணா அறிவாலயம் வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் ஜூன் 3ம் தேதி காலை 9மணிக்கு தொண்டர்களின் வாழ்த்துக்களை கருணாநிதி பெற்றுக் கொள்வார் என்று சென்னை மாவட்ட திமுகசெயலாளர்கள் அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக தென் சென்னை, வட சென்னை மாவட்ட கழக செயலாளர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில்,கருணாநிதியின் 81வது பிறந்த நாளையொட்டி ஜூன் 3ம் தேதி காலை 7 மணிக்கு கோபாலபுரம் இல்லத்திலிருந்துபுறப்படும் கலைஞர், அண்ணா நினைவிடம், பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடம் ஆகியவற்றிற்குச்சென்று மலரஞ்சலி செலுத்துகிறார்.
பின்னர் காலை 9 மணியளவில் கலைஞர் அரங்கத்தில் தொண்டர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்கிறார்.மாலை 6 மணிக்கு தீவுத்திடல் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.
-
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications