நானும் காங்கிரஸ்காரன்தான்: ப.சிதம்பரம்
சென்னை:
காங்கிரஸ் கட்சியில் நானும் ஒரு உறுப்பினர் என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
மத்திய நிதியமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் ப.சிதம்பரம் சென்னை வந்தார். பின்னர் தனது வீட்டில் அவர்செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் காங்கிரஸ் கட்சியில் எப்போது இணைவேன் என்ற கேள்வி அடிக்கடிகேட்கப்படுகிறது.
மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டபோதே நானும் காங்கிரஸில் சேர்ந்து விட்டேன். வேட்பு மனு தாக்கலுக்கானஉறுதிமொழிப் பத்திரம் கொடுக்கும்போது நான் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் என்ற வார்த்தை வரும். எனவேஇப்போது நானும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராகத்தான் இருக்கிறேன்.
மக்களவைத் தேர்தலில் மக்கள் கொடுத்துள்ள தீர்ப்பு, மதவாதத்திற்கு எதிரானது. குறுகிய மனப்பான்மையுடன்ஆட்சி நடத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிரான தீர்ப்பு இது. மற்றபடி பொருளாதார சீர்திருத்தங்களைமக்கள் எதிர்க்கவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன்.
பொருளாதார சீர்திருத்தங்களை சரியான முறையில் நடைறைப்படுத்தாத காரணத்தால்தான் தேசிய ஜனநாயகக்கூட்டணிக்கு மாபெரும் தோல்வி கிடைத்துள்ளது.
உலகளாவிய போட்டிகளை சந்தித்து, சமாளித்து அதையும் மீறி லாபம் சம்பாதிக்கும் பொதுத்துறை நிறுவனங்கள்மட்டுமே தொடர்ந்து இயக்கப்படும். மற்ற நிறுவனங்கள் குறித்து தனித்தனியாக ஆய்வு நடத்தி முடிவெடுக்கப்படும்.
கம்யூனிஸ்டுகள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு இடைஞ்சலாக இருக்க மாட்டார்கள். பொருளாதாரரீதியில் வலுவான இந்தியாவைப் பார்க்க அவர்களும் ஆவலுடனும், உத்வேகத்துடன் இருக்கிறார்கள்.
சென்வாட் வரி விதிப்பு குறித்து உரியவர்களிடமிருந்து கருத்து கேட்டுள்ளேன். இதுதொடர்பாக இன்னும் ஒருவாரத்தில் விவாதித்து முடிவெடுத்து, நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்படும் என்றார் ப.சிதம்பரம்.
கருணாநிதியுடன் சந்திப்பு:
இந் நிலையில் திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்திற்குச் சென்று சிதம்பரம் சந்தித்தார். இந்தச் சந்திப்புசுமார் 30 நிமிடங்கள் நீடித்தது. சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, இது மரியாதைநிமித்தமான சந்திப்பு என்று கூறினார்.












Click it and Unblock the Notifications