தமிழக அரசிடம் ஒத்துழைப்பு கிடைக்காது: ராஜா
பெரம்பலூர்:
மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் எந்தவொரு திட்டத்தையும் எங்களால் செய்யமுடியாது. ஆனால் இந்தஅரசு இருக்கும் வரையில் ஒத்துழைப்பு அளிக்காது என்று மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ராஜாகூறினார்.
மத்திய அமைச்சரான பின்பு முதன்முதலாக பெரம்பலூருக்கு வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தின் மீதும், தமிழக மக்களின் மீதும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு உண்மையான அக்கறை இருக்குமானால்மாநில அரசின் திட்டங்களை நிறைவேற்ற மத்திய அமைச்சர்கள் முழு ஒத்துழைப்பை வழங்குவார்கள்.
ஆனால், தமிழக நதிகளைத் தூய்மைப்படுத்துவதற்காக மத்திய அரசு வழங்கிய ரூ. 1,500 கோடி மதிப்புடையதிட்டங்களைக் கடந்த 3 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்த தமிழக அரசு முன்வரவில்லை.
மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் ஒரு திட்டத்தையும் செயல்படுத்தமுடியாது. இந்த அரசு இருக்கும்வரையிலும் ஒத்துழைப்பு கிடைக்காது.
குளித்தலையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இருந்து முசிறி, துறையூர், தம்மம்பட்டி வழியாக சேலம்வரையிலும், துறையூர், பெரம்பலூர், அரியலூர், ஜெயங்கொண்டம், கும்பகோணம் வழியாக பாண்டிச்சேரிகடற்கரை சாலையில் இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படும் என்றார் ராஜா.
-
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications