காவிரி: பிரதமரை ஜெ. சந்திக்க விவசாயிகள் கோரிக்கை
விழுப்புரம்:
காவிரி ஆணையத்தை உடனடியாக கூட்டி தமிழக காவிரி டெல்டாப் பகுதிகளுக்கு கர்நாடகத்திடமிருந்து தண்ணீர்பெற்றுத் தர பிரதமர் மன்மோகன் சிங் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது.
தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது. கூட்டத்திற்குப் பின்னர்செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில்,
கடந்த 3 ஆண்டுகளாக கர்நாடகம் உரிய நீரை தமிழகத்திற்குத் தராததால் காவிரி டெல்டா பகுதி விவசாயிகள்கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்த ஆண்டும் குறிப்பிட்ட நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட முடியாத நிலை உள்ளது. கர்நாடகம் தண்ணீர்தருமா என்று தெரியவில்லை. எனவே காவிரி ஆணையக் கூட்டத்தை மன்மோகன் சிங் உடனடியாகக் கூட்டிகர்நாடகத்திடமிருந்து தண்ணீர் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதல்வர் ஜெயலலிதாவும், பிரதமரைச் சந்தித்து காவிரி ஆணையத்தைக் கூட்ட கோரிக்கை விடுக்க வேண்டும்.
தமிழக விவசாயிகளின் நலனை முன்னிட்டு, பயிர்க் கடனை தள்ளுபடி செய்ய தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாகுபடியைத் தொடங்கபுதிய கடன்களை வழங்கவும் உத்தரவிட வேண்டும் என்று கூறினார்.
-
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications