மக்கள் மீது ஜெவுக்கு திடீர் பரிவு: வாசன் கிண்டல்
சென்னை:
மக்கள் மீது முதல்வர் ஜெயலலிதாவுக்குத் திடீர் பரிவு வந்ததற்குக் காரணம் தேர்தல் தோல்வியே ஆகும் என்றுதமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
மக்களின் எண்ணங்களை, கஷ்டங்களை அறிந்து அதற்கு ஏற்ப செயல்படுவதுதான் நல்ல ஆட்சியாளர்களுக்குஅடையாளம். அதை செய்யத் தவறியதால்தான் மக்கள் அதிமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர்.
இந்த தேர்தலில் ஏற்பட்ட தோல்வி ஏழை, எளிய நடுத்தர மக்களின் பிரச்சினைகள் குறித்து அதிமுக அரசைநினைக்க வைத்திருக்கிறது. கடந்த 3 வருடமாக பொது மக்களை பாதிக்கும் வகையிலேயே அரசின் நடவடிக்கைகள்அமைந்திருந்தன.
கடந்த வாரம் இதற்கு முன்பு எடுத்த மக்கள் விரோத நடவடிக்கைகளை அரசு ரத்து செய்தது. இப்போதுமின்கட்டணத்தை குறைத்திருக்கிறார்கள். ஆனால் தங்களைப் பாதித்த நடவடிக்கைகளை மக்கள் எளிதில் மறக்கமாட்டார்கள். அத்தகைய மறக்க முடியாத சம்பவங்கள்தான் இந்த 3 ஆண்டுகளாக நடந்திருக்கிறது என்பதைஆட்சியாளர்கள் உணர வேண்டும்.
இப்போது, -தேர்தல் ஓட்டு வங்கி தான் தேவை என்ற எண்ணத்தில் அரசு செயல்பட தொடங்கியுள்ளது. ஆட்சிக்குவந்த நேரத்தில் மக்கள் மீது அக்கறை இல்லாமல் செயல்பட்ட அரசு தேர்தல் தோல்விக்கு பிறகு மக்கள் மீதுபரிவாக நடந்து கொள்வதன் பின்னணியை மக்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.
நாங்கள் (எதிர்க்கட்சிகள்) பல நேரங்களில் எடுத்துக் கூறியபோது செய்ய தவறியவர்கள் இப்போது செய்வதுஅவர்களது சொந்த லாபத்துக்காகத்தான் என்றார் வாசன்.
மேலும் அமைச்சர்கள் தேவை:
முன்னதாக டெல்லியிலிருந்து சென்னை திரும்பிய வாசன், சத்தியமூர்த்தி பவனில் உள்ள தனது அலுவலகத்தில்செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தபோது, தமிழக காங்கிரசுக்கு மேலும் சில அமைச்சர்கள் தேவை என்றார்.
மேலும் அவர் கூறியதாவது: தமிழகத்தைச் சேர்ந்த 12 பேர் மத்திய அமைச்சர்களாகியுள்ளனர். இது மகிழ்ச்சியைத்தருகிறது. அதேசமயம், 12 பேரில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் 2 பேர் மட்டுமே என்பது சிறிதுவருத்தத்தையும் தருகிறது.
இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருடன் பேசவுள்ளேன்.தமிழக காங்கிரஸைச் சேர்ந்த மேலும் சிலருக்கு மத்திய அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட வேண்டும்.
இதன் மூலம் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி அபாரமாக இருக்கும், மேலும், தமிழக நலத் திட்டங்களைவிரைந்து செயல்படுத்த உதவியாகவும் இருக்கும் என்றார் அவர்.
மத்திய அமைச்சரவையில் வாசன் ஆதரவாளர்கள் ஒருவருக்குக் கூட அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லைஎன்பது குறிப்பிடத்தக்கது.
-
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications