கறுப்பு பணம் வைத்திருப்போருக்கு மன்னிப்பு கிடையாது: ப.சிதம்பரம்
டெல்லி:
கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களிடம் இருந்து அதை பறிமுதல் செய்யவும், வரி ஏய்ப்பாளர்களிடம் இருந்துவரிகளை வசூலிக்கவும் மத்திய அரசு புதிய திட்டத்தை தயாரித்து வருவதாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்தெரிவித்துள்ளார்.
இது குறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
1998-ம் ஆண்டில் வருமானத்தை தாமாக முன்வந்து தெரிவிக்கும் முறையை அமல்படுத்தியபோது கறுப்புப்பணத்தைத் தெரிவித்தவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது.
புதிய திட்டம் விரைவில் வருகிறது. அதில் மன்னிப்புக்கு இடம் இருக்காது.
ஐக்கிய முன்னணி ஆட்சியின்போது தாமாக முன்வந்து வருமானத்தைத் தெரிவிப்போர் 30 சதவீதம் வரிசெலுத்தினால் போதும். ஆனால், இப்போது அறிவிக்கப்பட உள்ள புதிய திட்டத்தில் பல பிரிவுகள் இருக்கும்.
கறுப்புப் பணம் வைத்திருப்போர், கள்ளச் சந்தைக்காரர்கள், அத்தியாவசிய பொருள்களைப் பதுக்குவோர் மீதுகடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசின் பொது செயல் திட்டத்தின் பொருளாதாரஅம்சங்களில் கூறப்பட்டுள்ளது. வரி வசூல் நிர்வாகத்தை மேம்படுத்தும் வகையில் மாற்றங்கள் கொண்டு வரப்படும்என்றார்.
-
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம்












Click it and Unblock the Notifications