தமிழகத்தில் மின் கட்டணம் அதிரடி குறைப்பு: ஜெ. சலுகை மழை
சென்னை:
மூன்றாண்டு முன் அமலாக்கிய மின் கட்டண உயர்வை முதல்வர் ஜெயலலிதா திடீரென ரத்துசெய்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் விழுந்த அடியைத் தொடர்ந்து, தான் அமலாக்கிய பல்வேறு கடுமையானநடவடிக்கைகளை தமிழக அரசு கைவிட்டுள்ளது. அத்தோடு சலுகைகளையும் அறிவித்து வருகிறது.
அந்த வரிசையில் 2001ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி உயர்த்தப்பட்ட வீடுகளுக்கான மின்கட்டணத்தை இப்போது திரும்பப் பெற்றுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. இதனால் தமிழகத்தில் மின்கட்டணம் குறைகிறது.
இந்த கட்டணக் குறைப்பால் அரசுக்கு ரூ. 910 கோடி இழப்பு ஏற்படும்.
இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
2001ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை அரசு திரும்பப் பெறுகிறது.இதன் மூலம் 116.57 லட்சம் குடும்பங்கள் பலனடைவர். இந்த கட்டணக் குறைப்பு வரும் ஜூன் 16ம்தேதி முதல் அமலுக்கு வரும்.
இதனால் அரசுக்கு ரூ. 910 கோடி இழப்பு ஏற்படும். இந்தத் தொகையை மானியமாக மின்துறைக்குஅரசு வழங்கும்.
குறைந்தபட்ச மின் கட்டணம் ரூ. 1.10 ஆக தற்போது உள்ளது. இது 75 பைசாவாகக் குறைக்கப்பட்டுள்ளது.அதிகபட்ச கட்டணம் ரூ.4.75 ஆக தற்போது உள்ளது. இது ரூ.3.05 ஆக குறைக்கப்படுகிறது.
புதிய கட்டணப்படி 1 முதல் 25 யூனிட் வரை 75 பைசாவும், 26 முதல் 50 யூனிட் வரை 85 பைசாவும், 51 முதல் 100யூனிட் வரை ரூ. 1.50 ரூபாயும், 101 முதல் 300 யூனிட் வரை ரூ. 2.20 ரூபாயும், 301 யூனிட்டும் அதற்கு மேலும்உள்ள யூனிட்டுகளுக்கு ரூ. 3.05 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும்.
உதாரணத்துக்கு, மாதத்துக்கு 250 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்தும் குடும்பங்கள் இப்போது மாதம்ரூ. 720 கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளது. இந்தக் கட்டணக் குறைப்பால் அது ரூ. 450 ஆகக்குறையும்.
இந்த மின் கட்டணக் குறைப்பு காரணமாக லட்சக்கணக்கான குடும்பங்கள் பலனைடையும். இதுபோன்ற சலுகையை இந்தியாவில் எந்த மாநில அரசும் வழங்கியதில்லை.
இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
-
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications