சென்னை: ரூ. 2 லட்சம் போலி முத்திரை தாள் பறிமுதல்
சென்னை
சென்னை மடிப்பாக்கம் பகுதியில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள போலி முத்திரைத்தாள் பறிமுதல் செய்யப்பட்டது. இதைவைத்திருந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை தாம்பரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் போலி முத்திரைத் தாள் விற்றதாக 2 பேரை சில மாதங்களுக்குமுன்பு போலீஸார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போலி முத்திரைத்தாள் மோசடி தொடர்பாக போலீஸார் அடிக்கடி சோதனை நடத்தி சிலரைக் கைது செய்து வந்தனர்.
சமீபத்தில் மதுரையில் எல்.ஐ.சி அதிகாரி ஒருவரும் போலி முத்திரைத் தாள் விற்பனை தொடர்பாக கைதுசெய்யப்பட்டார். இந் நிலையில் சென்னையில் ஒரு இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அவரது பெயர் செந்தில் முருகன். இவரது வீட்டில் போலீஸார் சோதனைநடத்தியபோது ரூ. 2 லட்சம் மதிப்புள்ள போலி முத்திரைத் தாள் இருந்தது தெரிய வந்தது. மேலும் ரூ. 1.25 லட்சம்ரொக்கப் பணமும் இருப்பு இருந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
பர்மா பஜாரைச் சேர்ந்த முகம்மது கனீப் என்பவர் தன்னிடம் இந்த போலி முத்திரைத் தாள்களைக் கொடுத்ததாகவிசாரணையில் செந்தில் முருகன் கூறியுள்ளார். தான் கொடுத்த கடன் தொகைக்குப் பதிலாக இந்த போலி முத்திரைத்தாள்களை கனீப் கொடுத்ததாகவும் செந்தில் முருகன் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து போலி முத்திரைத் தாள் மோசடி மன்னன் அப்துல் கரீம் டெல்ஜிக்கும், இவர்களுக்கும் தொடர்புஇருக்குமா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications