தமிழக காங்.குக்கு மேலும் அமைச்சர்கள் தேவை: வாசன்
சென்னை:
தமிழக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேலும் சில எம்.பிக்களுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்க வேண்டும்என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கோரியுள்ளார்.
டெல்லியிலிருந்து சென்னை திரும்பிய அவர் சத்தியமூர்த்தி பவனில் உள்ள தனது அலுவலகத்தில்செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தைச் சேர்ந்த 12 பேர் மத்திய அமைச்சர்களாகியுள்ளனர். இதுமகிழ்ச்சியைத் தருகிறது. அதேசமயம், 12 பேரில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் 2 பேர் மட்டுமே என்பதுசிறிது வருத்தத்தையும் தருகிறது.
இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருடன் பேசவுள்ளேன்.தமிழக காங்கிரஸைச் சேர்ந்த மேலும் சிலருக்கு மத்திய அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட வேண்டும்.
இதன் மூலம் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி அபாரமாக இருக்கும், மேலும், தமிழக நலத் திட்டங்களைவிரைந்து செயல்படுத்த உதவியாகவும் இருக்கும் என்றார் அவர்.
மத்திய அமைச்சரவையில் வாசன் ஆதரவாளர்கள் ஒருவருக்குக் கூட அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லைஎன்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications