புதிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி: ஆர்.சி. லஹோடி
டெல்லி:
உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ரமேஷ் சந்திர லஹோட்டி இன்று பதவியேற்றார்.
தலைமை நீதிபதி ராஜேந்திர பாபு இன்று ஓய்வு பெறுவதையடுத்து, புதிய தலைமை நீதிபதியாக லஹோட்டிபதவியேற்றார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர்அப்துல் கலாம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
துணைக் குடியரசுத் தலைவர் பைரோன்சிங் ஷெகாவத், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, மத்திய அமைச்சர்கள் சிவராஜ் பாட்டீல், ப.சிதம்பரம், மணிசங்கர் அய்யர், அர்ஜூன் சிங்,
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.எதிர்கட்சித் தலைவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.
லஹோட்டி மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள குணாவில் 1940ம் ஆண்டு பிறந்தார். 1962ம் ஆண்டுவழக்கறிஞராக தனது பணியைத் தொடங்கினார். மாவட்ட நீதிபதியாகவும், மத்திய பிரதேச மாநில உயர் நீதிமன்றநீதிபதியாகவும் பணியாற்றினார்.
1994ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், பின்னர் 1998ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும்நியமிக்கப்பட்டார். கடந்த மாதம் பதவியேற்ற தலைமை நீதிபதி ராஜேந்திர பாபு ஓய்வு பெறுவதையடுத்து புதியதலைமை நீதிபதியாக லஹோட்டி இன்று பதவியேற்றார். 18 மாதங்களுக்கு இவர் இந்தப் பதவியை வகிப்பார்.
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications