சென்னை: தொழிற்சாலையில் பெரும் தீவிபத்து; 2,700 தொழிலாளர்கள் கதி?
சென்னை:
சென்னை- காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரசாயான டேங் வெடித்துஆலை முழுவதும் எரிகிறது. ஆலையில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் நிலை என்னவென்றுதெரியவில்லை.
சென்னை-காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் திருப்பெரும்பூர் அருகே தண்டலம் என்ற இடத்தில் வாகனங்களுக்குஇருக்கைகள் செய்யும் தொழிற்சாலை உள்ளது. இன்று காலை இத் தொழிற்சாலையில் மின்சாரம் தடைபட்டதால்ராட்சத ஜெனரேட்டரை இயக்கினர்.
அப்போது ஏற்பட்ட தீப்பொறியால் ஆலையில் உள்ள ரசாயன டேங்குகள் தீப்பிடித்து வெடித்து சிதறியது. இதனால்ஏறத்தாழ 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட கம்பெனி முழுவதும் தீப்பிடித்தது. தொழிலாளர்கள் பலர் அவசர வழியாகஉயிர் தப்பினர்.
ஆவடி, பூந்தமல்லி, திருவள்ளூர், கிண்டி, அசோக்நகர், மாம்பலம், அண்ணாசாலை பகுதிகளில் இருந்து 50க்கும்மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
கம்பெனிக்குள் வேலை செய்து கொண்டிருந்த 2,700 தொழிலாளர்களில் எத்தனை பேர் தப்பித்தனர் என்பதுதெரியவில்லை. தீ முழுவதும் அணைக்கப்பட்ட பிறகுதான் சேத மதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்து தெரிய வரும்.


Click it and Unblock the Notifications
