லாக்-அப்பில் கைதி சாவு: 2 போலீஸாருக்கு ஆயுள் தண்டனை
கடலூர்:
லாக் அப்பில் அடைக்கப்பட்டிருந்த கைதி மர்மமான முறையில் இறந்த வழக்கில், கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம்விரைவு நீதிமன்றத்தில் 2 போலீஸாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 1993ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி விருத்தாச்சலம் அருகே உள்ள கம்மாபுரம் காவல் நிலைய சப்இன்ஸ்பெக்டர் அந்தோணிச்சாமி, ஏட்டுக்கள் வீராசாமி, ராமசாமி ஆகியோர் ஒரு திருட்டு வழக்கு தொடர்பாகராசாக்கண்ணு என்ற விவசாயியை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
அடுத்த நாள் விவசாயி ராசாக்கண்ணு தப்பி ஓடி விட்டதாக அவரது குடும்பத்தினரிடம் போலீஸார் கூறியுள்ளனர்.இதைக் கேட்ட ராசாக்கண்ணுவின் குடும்பத்தினர் அதிர்ச்சியுற்றனர். இந் நிலையில் மீன்சுருட்டி பகுதியில்ராசாக்கண்ணுவின் உடல் சில நாட்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டது.
போலீஸார் கூறியதற்கும், ராசாக்கண்ணு பிணமாக கிடந்ததற்கும் சம்பந்தம் இல்லாமல் இருப்பதைப் பார்த்தராசாக்கண்ணுவின் குடும்பத்தினர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்துராசாக்கண்ணு மர்ம மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து நடந்த விசாரணையின் இறுதியில் சப் இன்ஸ்பெக்டர் அந்தோணிச்சாமி, ஏட்டுக்கள் வீராசாமி,ராமசாமி ஆகியோர் மீது விவசாயியைக் கொலை செய்ததாகவும், இன்ஸ்பெக்டர் பாஷ்யம், சப் இன்ஸ்பெக்டர்சுப்ரமணியம் ஆகியோர் இந்தக் கொலையை மறைத்ததாகவும் கூறி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் விருத்தாச்சலம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், அந்தோணிச்சாமி, வீராசாமி ஆகியோருக்குஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதுதவிர அந்தோணிச்சாமிக்கு ரூ. 6,700 அபராதமும், வீராசாமிக்கு ரூ. 5700அபராதமும் விதிக்கப்பட்டது.
ஏட்டு வீராசாமிக்கு மேலும் 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ. 3,500 அபராதமும் விதித்து நீதிபதிஉத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தியையும், சப் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியனையும் நிரபராதி என்றுஅறிவித்து இருவரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications