மாநில மொழியை கட்டாய பாடமாக்க அரசுக்கு அதிகாரம்: உச்ச நீதிமன்றம்
டெல்லி:
சிறுபான்மை கல்வி நிலையங்களில் மாநில மொழியைக் கட்டாய பாடமாக அறிவிக்க அதிகாரம் அரசுக்கு உண்டுஎன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
மகாராஷ்டிரா மாநில அரசு தனது மாநிலத்தில் உள்ள சிறுபான்மை பள்ளிகள் உட்பட அனைத்துபள்ளிக்கூடங்களிலும் மராத்தி மொழியைக் கட்டாய பாடமாக கற்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து குஜராத்தி பள்ளிக்கூட நிர்வாகத்தினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதுசிறுபான்மை மக்களின் உரிமையில் தலையிடுவது ஆகும் என்று வாதிட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ராஜேந்திர பாபு, நீதிபதி லட்சுமணன், நீதிபதி மாத்தூர் ஆகியோர்அடங்கிய பெஞ்ச் மகாராஷ்டிரா அரசின் உத்தரவுக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்தது.
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில்,
சிறுபான்மை பள்ளிகளில் மாநில மொழியை கட்டாய பாடமாக அறிவிக்கும் உரிமை மாநில அரசுக்கு உண்டு. இதுசிறுபான்மை இனத்தவரின் அதிகாரத்தில் தலையிடுவதாகாது.
மாநிலத்தின் நலனை கருத்தில் கொண்டு மராட்டிய அரசு எடுத்த கொள்கை முடிவைத் தவறு என்று சொல்லமுடியாது. ஒரு மாநிலத்தில் வாழும் சிறுபான்மை மக்கள் அந்த மாநிலத்தின் மொழியை படிக்க முடியாது என்றுசொல்வது சரியல்ல. அப்படி சொல்வது தேச ஒற்றுமைக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடும்.
பல மொழிகளை படிப்பதால் கலாசார இணைப்பு ஏற்பட்டு நாட்டின் ஒருமைப்பாடு வலுவடையும். எனவேமகாராஷ்டிரா அரசின் உத்தரவு அங்கு வாழும் குஜராத்தி சமூகத்தினரின் உரிமையை பாதிக்கும் என்பதை ஏற்கமுடியாது என்று கூறினர்.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications