ரூ.800 கோடியில் சேது சமுத்திரத் திட்டம்: டி.ஆர்.பாலு
சென்னை:
ரூ.800 கோடி செலவில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்றுமத்திய கப்பல் போக்குவரத்து, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர். பாலுதெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றும் அமைப்பாக தூத்துக்குடி துறைமுக பொறுப்புக் கழகம்நியமிக்கப்பட்டுள்ளது. வரும் 15ம் தேதி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் ஒப்புதல் பெறவிண்ணப்பிக்கப்படும். மத்தியச் சுற்றுச் சூழல் அமைச்சகத்திடம் ஒப்புதல் பெறுவதற்கும் நடவடிக்கைகள்மேற்கொள்ளப்படும்.
ஒப்புதல்கள் கிடைத்தவுடன், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கும். இத் திட்டத்திற்கு தமிழக அரசுஇடையூறு செய்யும் என்று நான் கருதவில்லை.
சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் மேற்கத்திய நாடுகளில் இருந்து சென்னை துறைமுகத்துக்குவருவதற்கான தூரம் 350 கடல்மைல்கள் குறையும்.
கப்பலின் கீழ்த் தளத்துக்கும், கடலின் தரைக்கும் இடையே 7 மீட்டர் இடைவெளி இருக்கும் வகையில்ஆழப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்கு ரூ.800 கோடி செலவாகும்.
முதலில் இந்தத் திட்டத்திற்கான நிதி ஆதாரத்தைக் கண்டறிய வேண்டியுள்ளது. இப்போதைக்கு ஒரு கப்பல் செல்லும்வகையில் பாதை அமைக்கப்படும் என்றார் டி.ஆர். பாலு.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications