ஊழல் வழக்கு: ஹட்கோ முன்னாள் சேர்மனுக்கு ஜாமீன்
சென்னை:
ரூ.15 கோடி ஊழல் வழக்கில் கைதான ஹட்கோ நிறுவனத்தின் முன்னாள் சேர்மன் அருண்குமார் ஜாமீனில்விடுதலை செய்யப்பட்டார்.
லஞ்சம் வாங்கிக் கொண்டு, கோயம்பேட்டில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு அரிஹந்த் என்ற ரியல்எஸ்டேட் நிறுவனத்துக்கு முறைகேடாக கடன் உதவியளித்தாகவும், கடனைத் திரும்பிப் பெற முயற்சிமேற்கொள்ளவில்லை என்றும் அருண்குமார் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இதில் அரசு பணம் ரூ.14.68 லட்சம் மோசடி செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அருண்குமாரைசி.பி.ஐ. போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து தன்னை ஜாமீனில் விடுவிக்கக்கோரி சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றத்தில் அருண்குமார் மனு தாக்கல்செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடியானது.
இந் நிலையில், கைது செய்த 60 நாளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவேண்டும். ஆனால் சி.பி.ஐ. போலீசார் 60நாள் தாண்டிய பிறகும் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யவில்லை. எனவே தன்னை ஜாமீனில் விடுதலைசெய்ய வேண்டும் என்று சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் அருண்குமார் மீண்டும் மனுத் தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி ராமசாமி ரூ.2 லட்சத்துக்கு சொந்த ஜாமீனிலும், அதே தொகைக்கு இரு நபர் ஜாமீனிலும்விடுதலை செய்ய உத்தர விட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications