மக்களவை கூடியது
டெல்லி:
14வது மக்களவைக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.
இன்று காலை மார்க்சிஸ்ட் உறுப்பினர் சோம்நாத் சாட்டர்ஜியை இடைக்கால சபாநாயகராக குடியரசுத் தலைவர்அப்துல் கலாம் நியமித்தார். இதன் மூலம் புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, சோம்நாத் சாட்டர்ஜிமக்களவையை வழிநடத்திச் செல்ல முடியும்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங், நாடாளுமன்றவிவகாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காலை 11 மணிக்கு மக்களவை கூடியது. புதிய உறுப்பினர்களுக்கு சோம்நாத் சாட்டர்ஜி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். முதலில் ராணுவ அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், பின்னர் முன்னாள் பிரதமர் வாஜ்பாயும்பதவியேற்றனர். இவர்களையடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் மற்றும் பல உறுப்பினர்களும்பதவியேற்றனர்.
எம்.பிக்களின் பதவி ஏற்பு நிகழ்ச்சி நாளையும் நடைபெறும். இதனையடுத்து நாளை மறுநாள் சபாநாயகர் தேர்தல்நடைபெறுகிறது. வரும் 7ம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் அப்துல் கலாம்உரையாற்றுகிறார்.
மக்களவை சபாநாயகராக சோம்நாத் சாட்டர்ஜியை ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்க ஐக்கிய முற்போக்குக் கூட்டணிமுடிவு செய்துள்ளது. அதற்காக மக்களவைத் துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்குத் தர தயார் என்றுபிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார்.
ஆனால் சோம்நாத் சாட்டர்ஜியை எதிர்த்து பி.ஏ.சங்மாவை சபாநாயகராக நிறுத்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இந்த மக்களவைத் தொடரில் கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்குள்ளானவர்களுக்கு அமைச்சரவையில் இடம்கொடுத்தது தொடர்பாக பிரச்சனையைக் கிளப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
பாஜக கட்சியின் நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுத் தலைவராக முன்னாள் பிரதமர் வாஜ்பாயும், மக்களவைஎதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் துணைப் பிரதமர் எல்.கே.அத்வானியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!











Click it and Unblock the Notifications