வைகோ அமெரிக்கா செல்ல உயர்நீதிமன்றம் அனுமதி
சென்னை:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அமெரிக்கா செல்ல சென்னை உயர்நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.
11 மாதமாகும் தனது பேத்தியை, சிகாகோவில் உள்ள மகளிடம் கொண்டு சேர்ப்பதற்காக அமெ-ரிக்கா செல்லநீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என்றும் இதற்காக புதிய பாஸ்போர்ட்டை வழங்க பாஸ்போர்ட் அதிகா-ரிகளுக்குஉத்தரவிட வேண்டும் என்றும் கோ-ரி வைகோ உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார்.
இந்த மனுவை விசா-ரித்த உயர்நீதிமன்றம் கடந்த 18ம் தேதி ஒரு உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவில்,பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தின் வசம் உள்ள காலாவதியாகி விட்ட சிறப்பு பாஸ்போர்ட்டை வைகோவிடம்ஒப்படைக்க வேண்டும்.
வைகோ அந்த பாஸ்போர்ட்டை பாஸ்போர்ட் அதிகாரிகளிடம் வழங்க வேண்டும். பாஸ்போர்ட் அதிகாரிகள்வைகோவுக்கு புதிய சாதாரண பாஸ்போர்ட் வழங்கி, அதை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்என்று உத்தரவிட்டது.
அதன்படி பாஸ்போர்ட் அதிகா-ரிகள் வைகோவுக்கு புதிய சாதாரண பாஸ்போர்ட்டை வி-நியோகித்து அதைபூந்தமல்லி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இந் -நிலையில் ஏற்கனவே காலாவதியாகி விட்ட சிறப்ப பாஸ்போர்ட்டின்-மூலம் 2009ம் ஆண்டு வரைக்கும் விசா பெற்றிருந்தார் வைகோ. அந்த விசா தற்போது பாஸ்போர்ட்அதிகா-ரிகளிடம் உள்ளது.
எனவே, அந்த விசாவை தன்னிடம் வழங்குமாறும், புதிய பாஸ்போர்ட்டை தன்னிடம் பூந்தமல்லி நீதிமன்றம்ஒப்படைக்கமாறும், தன்னை அமெரிக்கா செல்ல அனுமதிக்குமாறும் கோரி கடந்த வாரம் புதிதாக ஒரு மனுவைஉயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் வைகோ.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி மிஸ்ரா மற்றும் நீதிபதி குலசேகரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் வைகோஅமெரிக்கா செல்ல அனுமதியளித்தது. வைகோவின் பாஸ்போர்ட்டை அவரிடம் ஒப்படைக்குமாறு பூந்தமல்லிபொடா சிறப்பு நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் 3 வார காலத்திற்கு வைகோ அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்யலாம் என்றும் ஜூன் 20ம் தேதிக்குள்அவர்சென்னை திரும்பி விட வேண்டும் என்றும் அவர்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
இதயைடுத்து வைகோ நாளை அமெரிக்கா செல்வார் என்று மதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications