வீரப்பனுக்கு உதவியதாக சுப. இளவரசன் வாக்குமூலம்
மேட்டூர்:
சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு பணம் மற்றும் ஆட்களைக் கொடுத்து உதவியதாக தமிழர் விடுதலைப் படைதலைவர் சுப. இளவரசன் ஒத்துக் கொண்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
தமிழக, கர்நாடக வனப் பகுதியில் அதிரடிப்படை போலீஸாரால் பிடிக்கப்பட்ட சுப. இளவரசனிடம் கடந்த 4நாட்களாக மேட்டூர் போலீஸார் விசாரணை நடத்தினர். மேட்டூர் டி.எஸ்.பி. அலுவலகத்தில் நடந்த விசாரணைக்குப்பின்னர் சுப. இளவரசன் மீண்டும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்ட சுப. இளவரசன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபின்னர் சேலம் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அப்போது மேட்டூர் டி.எஸ்.பி. சீனிவாசன்செய்தியாளர்களிடம் பேசுகையில், முதல்2 நாட்களுக்கு சுப. இளவரசன் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. அதன்பிறகு அவர் பல விஷயங்களைத் தெரிவித்தார்.
வீரப்பனுக்கு பணம், ஆட்களைக் கொடுத்து பல முறை உதவியதாக அவர் ஒத்துக் கொண்டுள்ளார். முன்னாள்அமைச்சர் நாகப்பாவை கடத்துவதற்காக தனது இயக்கத்தைச் சேர்ந்த 4 பேரை வீரப்பனிடம் அனுப்பியுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது கூட்டாளி அறிவழகன் என்பவர் மூலம் வீரப்பனுக்கு ஒரு ஏ.கே.47 ரகதுப்பாக்கியைக் கொடுத்துள்ளார் சுப. இளவரசன். இதற்காக வீரப்பனிடமிருந்து ரூ. 10 லட்சம் பணம் பெற்றுள்ளார்.
5 கொலை வழக்குகள் உள்பட 18 வழக்குகளில் அவருக்குத் தொடர்பு உள்ளது தெரிய வந்துள்ளது.
சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திலும் இளவரசனுக்கு தொடர்புஉள்ளது. இதை அவர் ஒத்துக் கொண்டுள்ளார்.
போலீஸ் விசாரணையின்போது மனித உரிமை மீறலில் காவல்துறையினர் ஈடுபடவில்லை. இதை சுப. இளவரசனேநீதிமன்றத்தில் ஒத்துக் கொண்டுள்ளார் என்றார் சீனிவாசன்.
-
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications