தமிழக, இலங்கை மீனவர்களிடையே அமைதி ஒப்பந்தம்
ராமேஸ்வரம்:
தமிழக மற்றும் இலங்கை மீனவர்களிடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
ராமேஸ்வரம், பாம்பன் பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை அடிக்கடி இலங்கை மீனவர்கள்கடத்திச் செல்வதும், தாக்குவதும் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக மீனவர்கள் குறிப்பாக ராமேஸ்வரம்மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் இலங்கை மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ராமேஸ்வரம், பாம்பன், புதுக்கோட்டை,ஜெகதாப்பட்டனம், நாகப்பட்டனம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 21 பேர் அடங்கிய குழு சமீபத்தில்இலங்கை சென்றது.
மீனவர் மீட்பு குழு என்ற அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பேச்சுவார்த்தையில் தமிழக மீனவர் குழுவும்,இலங்கை மீனவர் சங்கங்களின் குழுவும் பங்கேற்றன. இரு தரப்பு மீனவர்களும் தங்களது பிரச்சினைகள்,குறைகளை கூறினர். இதன் அடிப்படையில் சில ஒப்பந்தங்கள் ஏற்பட்டுள்ளன.
இது குறித்து பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட ராமேஸ்வரம் சிங்காரவேலர் மீனவர் சங்கத் தலைவர்அருளானந்தம் கூறுகையில், தமிழக மீனவர்கள் விதிமுறைகளை மீறி மீன் பிடித்தால் அதுகுறித்து தமிழக மீனவர்சங்கத்திடம் இலங்கை மீனவர்கள் புகார் கூற வேண்டும். அதை விடுத்து நேரடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
அதேபோல, பாக் ஜலசந்தியில் இலங்கை கடல் எல்லைக்கு 3 கடல் மைல் தொலைவுக்கு முன்பாகவே தமிழகமீனவர்கள் மீன் பிடிப்பார்கள். அதை மீறிச் செல்ல மாட்டார்கள். மீன்பிடியின்போது சுருள் வலை உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட வலைகளை தமிழக மீனவர்கள் பயன்படுத்த மாடடார்கள் என்பது உள்ளிட்ட ஒப்பந்தங்கள்கையெழுத்தாகியுள்ளன என்றார் அருளானந்தம்.
மன்னார் நகரில் நடந்த இந்த பேச்சுவார்த்தைகளின்போது மாவட்ட ஆட்சித் தலைவர் பிஷப் ஆர்.ஜோசப்,எம்.பிக்கள் செல்வம் அடைக்கலநாதன், விநோதலிங்கம் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
-
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications