ஜெ.மீதான வழக்கை வாபஸ் பெறுகிறது சிபிசிஐடி
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா மீது தனி நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வரும் கிரானைட் ஊழல் வழக்கை முடித்துக்கொள்வதாக தனி நீதிபதிக்கு சிபிசிஐடி கடிதம் எழுதியுள்ளது.
கடந்த 1991ம் ஆண்டு முதல் 96ம் ஆண்டு வரையிலான முந்தைய ஜெயலலிதா அரசில் நடந்த பல்வேறுமுறைகேடுகள், ஊழல்கள் குறித்து விசாரிக்க 1997ம் ஆண்டு தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது.
ஜெயலலிதா மீது தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளில் ஒன்றுதான் ரூ. 75 கோடி கிரானைட் ஊழல் வழக்கு.விதிமுறைகளுக்கு மாறாக கிரானைட் குவாரிகளுக்கு குத்தகை வழங்கியதில் ரூ. 75 கோடி வரை அரசுக்கு இழப்புஏற்பட்டதாகக் கூறி தனி நீதிமன்றத்தில் திமுக அரசு சார்பில் சிபிசிஐடி வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில், ஜெயலலிதா தவிர முன்னாள் அமைச்சர் சின்னச்சாமி, டாமின் நிறுவன முன்னாள் நிர்வாகஇயக்குநர் தியானேஸ்வரன், முன்னாள் தொழில்துறை செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.
முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இருந்து வந்த இந்த வழக்கை தற்போது முடித்துக்கொள்வதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தனி நீதிபதி மதிவாணனுக்கு சிபிசிஐடி எழுதியுள்ளகடிதத்தில், இந்த வழக்கை தொடர்ந்து நடத்த விரும்பவில்லை, முடித்துக் கொள்ள விரும்புகிறோம் என்றுகூறியுள்ளது.
ஜெயலலிதா மீது தற்போது நிலுவையில் உள்ள பிற வழக்குகள் விவரம்: மொத்தம் 46 வழக்குகள் ஜெயலலிதா,சசிகலா உள்ளிட்டோர் மீது திமுக அரசால் கடந்த 1997ம் ஆண்டு போடப்பட்டது.
லண்டன் ஹோட்டல் வழக்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நிலுவையில் உள்ளது.அதேபோல, 3 லட்சம் அமெரிக்க டாலர் பணம் ஜெயலலிதா கணக்கில் உள்ளது தொடர்பான வழக்கு முதல் தகவல்அறிக்கை நிலையில் உள்ளது.
இதுதவிர மீனா விளம்பர நிறுவன வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் ஜெயலலிதா முதன்மைக்குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தற்போது கர்நாடகநீதிமன்றத்தில் விசாரிக்கப்படவுள்ளது.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications