கருணாநிதியின் முத்துவிழா: மன்மோகன், வாஜ்பாய் வாழ்த்துசென்னை:திமுக தலைவர் கருணாநிதியின் 81-வது பிறந்த நாளையொட்டி அண்ணா அறிவாலயத்தில் ஏராளமான தலைவர்கள், தொண்டர்கள் கருணாநிதிக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.1924ம் ஆண்டு ஜூன் மாதம் 3ம் தேதி முத்துவேலர்-அஞ்சுகத்தம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தவர் கருணாநிதி. தமிழக அரசியலில் மட்டுமல்லாது இந்திய அரசியலிலும் அழுத்தமான முத்திரை பதித்துள்ள கருணாநிதிக்கு இன்று 80 வயது முடிந்து 81வது வயது பிறக்கிறது.இதையொட்டி திமுகவினர் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். நேற்றே அவை தொடங்கி விட்டன. அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கில், கருத்தரங்கம், பட்டிமன்றம், கவியரங்கம் ஆகியவை நடந்தன.இன்று காலை அண்ணா சமாதிக்கு சென்று கருணாநிதி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் பொதுச் செயலாளர் அன்பழகன், மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, பெரம்பலூர் ராசா ஆகியோர் உள்ளிட்ட திமுகவினர் சென்றிருந்தனர்.பின்னர் பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்திலும் கருணாநிதி அஞ்சலி செலுத்தினார். திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி கருணாநிதியை வரவேற்று அழைத்துச் சென்றார்.பிறகு தனது கோபாலபுரம் வீட்டில் கேக் வெட்டிக் கொண்டாடிய கருணாநிதிக்கு பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் ஆற்காடு வீராசாமி ஆகியோர் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.காலை 9 மணிக்கு அண்ணா அறிவாலயம் வந்த கருணாநிதிக்கு தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதன் பிறகு கலைஞர் அரங்கத்தில் பிரமாண்டமான வடிவில் நாடாளுமன்ற மாதிரியில் அமைந்திருந்த கேக்கை வெட்டினார் கருணாநிதி.மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் சார்பில் நேரில் வந்து பூச்செண்டு வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார்.மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மகன் மத்திய அமைச்சர் அன்புமணி, பாமக மத்திய அமைச்சர் ஆர்.வேலு, பாமக தலைவர் ஜி.கே.மணி, மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன், மார்க்சிஸ்ட் செயலாளர் வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் நல்லகண்ணு, முன்னாள் காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, டாக்டர் சேதுராமன், கவிஞர் வைரமுத்து, இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்ட பலரும் நேரில் வந்து கருணாநிதியை வாழ்த்தினர். முன்னதாக பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் துணைப் பிரதமர் அத்வானி, முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் ஆகியோர் தொலைபேசி மூலம் கருணாநிதிக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கருணாநிதிக்கு வாழ்த்துத் தந்தி அனுப்பினார்.இன்று மாலை தீவுத்திடலில் நடைபெறும் பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங், மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் நரேந்திரா, வைகோ, ஜி.கே.வாசன், ராமதாஸ், வரதராஜன், நல்லகண்ணு ஆகியோர் கருணாநிதியை வாழ்த்திப் பேசுகின்றனர். பின்னர் கருணாநிதி ஏற்புரை நிகழ்த்துகிறார்.இந் நிகழ்ச்சிக்காக சென்னை வந்த வி.பி.சிங், சிவராஜ் பாட்டீல் ஆகியோர் கருணாநிதியை அறிவாலயத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வி.பி.சிங், எனது நண்பர் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தத் தேர்தலில் அவர் எடுத்த முடிவு வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும் என்றார்.அடுத்த பேசிய சிவராஜ் பாட்டீல், நாட்டின் மூத்த தலைவர்களில் ஒருவரும், பழுத்த அரசியல் அனுபவம் மிக்கவருமான கருணாநிதியை வாழ்த்துவதற்காகவே சென்னை வந்தேன். அவரிடம் எனது வாழ்த்துக்களை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சார்பில் தெரிவித்தேன் என்றார்.தமிழக கவர்னர் மாற்றப்படுவாரா என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க பாட்டீல் மறுத்து விட்டார்.
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியின் 81-வது பிறந்த நாளையொட்டி அண்ணா அறிவாலயத்தில் ஏராளமான தலைவர்கள், தொண்டர்கள் கருணாநிதிக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
1924ம் ஆண்டு ஜூன் மாதம் 3ம் தேதி முத்துவேலர்-அஞ்சுகத்தம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தவர் கருணாநிதி. தமிழக அரசியலில் மட்டுமல்லாது இந்திய அரசியலிலும் அழுத்தமான முத்திரை பதித்துள்ள கருணாநிதிக்கு இன்று 80 வயது முடிந்து 81வது வயது பிறக்கிறது.
இதையொட்டி திமுகவினர் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். நேற்றே அவை தொடங்கி விட்டன. அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கில், கருத்தரங்கம், பட்டிமன்றம், கவியரங்கம் ஆகியவை நடந்தன.
இன்று காலை அண்ணா சமாதிக்கு சென்று கருணாநிதி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் பொதுச் செயலாளர் அன்பழகன், மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, பெரம்பலூர் ராசா ஆகியோர் உள்ளிட்ட திமுகவினர் சென்றிருந்தனர்.
பின்னர் பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்திலும் கருணாநிதி அஞ்சலி செலுத்தினார். திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி கருணாநிதியை வரவேற்று அழைத்துச் சென்றார்.
பிறகு தனது கோபாலபுரம் வீட்டில் கேக் வெட்டிக் கொண்டாடிய கருணாநிதிக்கு பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் ஆற்காடு வீராசாமி ஆகியோர் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.
காலை 9 மணிக்கு அண்ணா அறிவாலயம் வந்த கருணாநிதிக்கு தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதன் பிறகு கலைஞர் அரங்கத்தில் பிரமாண்டமான வடிவில் நாடாளுமன்ற மாதிரியில் அமைந்திருந்த கேக்கை வெட்டினார் கருணாநிதி.
மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் சார்பில் நேரில் வந்து பூச்செண்டு வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார்.
மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மகன் மத்திய அமைச்சர் அன்புமணி, பாமக மத்திய அமைச்சர் ஆர்.வேலு, பாமக தலைவர் ஜி.கே.மணி, மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன், மார்க்சிஸ்ட் செயலாளர் வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் நல்லகண்ணு,
முன்னாள் காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, டாக்டர் சேதுராமன், கவிஞர் வைரமுத்து, இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்ட பலரும் நேரில் வந்து கருணாநிதியை வாழ்த்தினர்.
முன்னதாக பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் துணைப் பிரதமர் அத்வானி, முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் ஆகியோர் தொலைபேசி மூலம் கருணாநிதிக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கருணாநிதிக்கு வாழ்த்துத் தந்தி அனுப்பினார்.
இன்று மாலை தீவுத்திடலில் நடைபெறும் பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங், மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் நரேந்திரா, வைகோ, ஜி.கே.வாசன், ராமதாஸ், வரதராஜன், நல்லகண்ணு ஆகியோர் கருணாநிதியை வாழ்த்திப் பேசுகின்றனர். பின்னர் கருணாநிதி ஏற்புரை நிகழ்த்துகிறார்.
இந் நிகழ்ச்சிக்காக சென்னை வந்த வி.பி.சிங், சிவராஜ் பாட்டீல் ஆகியோர் கருணாநிதியை அறிவாலயத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வி.பி.சிங், எனது நண்பர் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தத் தேர்தலில் அவர் எடுத்த முடிவு வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும் என்றார்.
அடுத்த பேசிய சிவராஜ் பாட்டீல், நாட்டின் மூத்த தலைவர்களில் ஒருவரும், பழுத்த அரசியல் அனுபவம் மிக்கவருமான கருணாநிதியை வாழ்த்துவதற்காகவே சென்னை வந்தேன். அவரிடம் எனது வாழ்த்துக்களை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சார்பில் தெரிவித்தேன் என்றார்.
தமிழக கவர்னர் மாற்றப்படுவாரா என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க பாட்டீல் மறுத்து விட்டார்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications