ஜெ.வுக்கு கொலை மிரட்டல் விடுத்து கைதான மாணவி தற்கொலைக்கு முயற்சி
திருநெல்வேலி:
முதல்வர் ஜெயலலிதாவைக் கொலை செய்ய சதி நடப்பதாக பொய்யான புகாரைக் கூறி கைதான சட்டக் கல்லூரிமாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளது திருநெல்வேலியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி சட்டக்கல்லூரியில் படித்து வருபவர் சோபியா. இவர் சமீபத்தில் ஜெயலலிதாவின் பிரசாரக் கூட்டத்தின்போது அவரைக் கொலை செய்ய அலெக்ஸிஸ் சுதாகர் என்பவர் சதி செய்து வருவதாக போலீஸாரிடம் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து அலெக்ஸிஸ் சுதாகரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது சோபியாவின் புகார் பொய்யானது என்பது தெரியவந்தது. அலெக்ஸிஸ் சுதாகரின் செல்போனைத் திருடிய சோபியா அதை தட்டிக் கேட்டு திட்டிய அலெக்ஸிஸை அவமானப்படுத்தும் விதத்தில்தான் பொய்யான புகாரைக் கூறியதாகத் தெரியவந்தது.
இதையடுத்து சோபியா கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலையாகி வந்தார். இந் நிலையில், திருநகர் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் தூக்க மாத்திரைகளைத் தின்று தற்கொலை செய்ய முயன்றார் சோபியா.
உயிருக்குப் போராடிய நிலையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பெருமாள்புரம் போலீஸார் சோபியா மீது தற்கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications