ஆளுநருடன் ஜெயலலிதா திடீர் சந்திப்பு
சென்னை:
தமிழக ஆளுநர் ராம்மோகன் ராவை முதல்வர் ஜெயலலிதா இன்று திடீரென்று சந்தித்துப் பேசினார்.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில் பல மாநில ஆளுநர்கள் மாற்றப்படலாம் என்று பேச்சு எழுந்துள்ளது. அவர்களில் ராம்மோகன் ராவும் ஒருவர் என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து டெல்லி சென்ற ராவ் அங்கு பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்டவர்களைப் பார்த்துப் பேசினார்.
இந் நிலையில் இன்று காலை ஜெயலலிதா திடீரென்று ஆளுநரை சந்தித்துப் பேசினார். 50 நிமிட நேர சந்திப்புக்குப் பின் வெளியே வந்த அவர், இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான். ஆளுநரை சந்தித்து நீண்ட நாட்களாகி விட்டதால் சந்திக்க வந்தேன்.
அமைச்சர்கள் மாற்றப்படுவார்களா என்பதை இப்போது கூற முடியாது. மக்கள் விருப்பத்திற்கு ஏற்பவே பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளோம் என்று தெரிவித்தார் அவர்.
ஆளுநரை ஜெயலலிதா சந்தித்துள்ளது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
-
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி












Click it and Unblock the Notifications