ஜெயலலிதாவை விமர்சித்த காவலருக்கு கட்டாய ஓய்வு
விருதுநகர்:
முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்துப் பேசியதாக கூறப்படும் தலைமைக் காவலருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக இருப்பவர் ஜெயராஜ். இவர் கடந்த 2002ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி நடந்த தமிழக அரசின் பந்த்தின்போது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேர் அருகே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது சக காவலர்களிடம் ஜெயலலிதாவை விமர்சித்துப் பேசியுள்ளார். இதை அந்தப் பக்கம் வந்த அமைச்சர் (அப்போது வெறும் எம்.எல்.ஏ.) இன்பத் தமிழன் கேட்டு விட்டு போலீஸில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் ஜெயராஜ் மீது போலீஸார் புகார் பதிவு செய்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில் நேற்று முன்தினம்தான் அமைச்சர் இன்பத்தமிழன் சாட்சியம் அளித்தார். இந் நிலையில், தலைமைக் காவலர் ஜெயராஜூக்கு கட்டாய ஓய்வு கொடுத்து மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம்












Click it and Unblock the Notifications