கருணாநிதி தேசிய அரசியலுக்கு வர வேண்டும்: வி.பி.சிங்சென்னை:திமுக தலைவர் கருணாநிதி தேசிய அரசியலுக்கு வர வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆனால் தமிழகத்தை விட்டு வெளியே போக அவரை தமிழக மக்கள் விட மாட்டார்கள் என்று முன்னாள் பிரதமர் வி.பி.சிங் கூறினார்.திமுக தலைவர் கருணாநிதியின் 81வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தீவுத் திடல் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் வி.பி.சிங் கலந்து கொண்டார்.அவர் பேசுகையில், இந்தியாவின் மிக உயர்ந்த தலைவர்களில் கருணாநிதியும் ஒருவர். அவரது பங்கு இந்திய அரசியலில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. சமீபத்திய அரசியல் நிகழ்வுகளில் அவர் மிக முக்கிய அங்கம் வகித்தார்.தமிழகத்தில் திமுக தலைமையில் அமைந்த கூட்டணி புல்டோசர் போல புறப்பட்டு மாபெரும் வெற்றியைப் பெற்று பாஜக கூட்டணியை தரைமட்டமாக்கி விட்டது.நாட்டின் மூத்த தலைவரான கருணாநிதி தலைமையிலான கூட்டணி சட்டசபைத் தேர்தலிலும் தொடர வேண்டும். கருணாநிதியின் ஆட்சி எப்போதுமே மிகச் சிறந்ததாக, வரலாறு படைத்ததாகவே இருக்கும் என்றார் அவர்.நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலும் பேசினார். அவரும் கருணாநிதிக்குப் புகழாரம் சூட்டினார்.இவர்கள் தவிர மத்திய ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சர் நரேந்திரா, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் வயலார் ரவி, பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரதராஜன், நல்லகண்ணு, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொஹைதீன் உள்ளிட்டோரும் கருணாநிதியை வாழ்த்திப் பேசினர்.
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி தேசிய அரசியலுக்கு வர வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆனால் தமிழகத்தை விட்டு வெளியே போக அவரை தமிழக மக்கள் விட மாட்டார்கள் என்று முன்னாள் பிரதமர் வி.பி.சிங் கூறினார்.
திமுக தலைவர் கருணாநிதியின் 81வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தீவுத் திடல் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் வி.பி.சிங் கலந்து கொண்டார்.
அவர் பேசுகையில், இந்தியாவின் மிக உயர்ந்த தலைவர்களில் கருணாநிதியும் ஒருவர். அவரது பங்கு இந்திய அரசியலில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. சமீபத்திய அரசியல் நிகழ்வுகளில் அவர் மிக முக்கிய அங்கம் வகித்தார்.
தமிழகத்தில் திமுக தலைமையில் அமைந்த கூட்டணி புல்டோசர் போல புறப்பட்டு மாபெரும் வெற்றியைப் பெற்று பாஜக கூட்டணியை தரைமட்டமாக்கி விட்டது.
நாட்டின் மூத்த தலைவரான கருணாநிதி தலைமையிலான கூட்டணி சட்டசபைத் தேர்தலிலும் தொடர வேண்டும். கருணாநிதியின் ஆட்சி எப்போதுமே மிகச் சிறந்ததாக, வரலாறு படைத்ததாகவே இருக்கும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலும் பேசினார். அவரும் கருணாநிதிக்குப் புகழாரம் சூட்டினார்.
இவர்கள் தவிர மத்திய ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சர் நரேந்திரா, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் வயலார் ரவி, பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,
காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரதராஜன், நல்லகண்ணு, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொஹைதீன் உள்ளிட்டோரும் கருணாநிதியை வாழ்த்திப் பேசினர்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications