மதுரை ஆதீன மடத்துக்கு புதிய இளைய சன்னிதானம்
மதுரை:
மதுரை ஆதீனத்தின் இளைய சன்னிதானமாக சுவாமிநாதன் (16) என்ற பிளஸ் 1 மாணவர் பட்டமேற்றுள்ளார்.
மதுரை ஆதீனம் திருஞான சம்பந்தரால் 6ம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்ட மடமாகும். இதுவே இந்தியாவில் முதல் மடமாகும்.
இத்தகைய ஆன்மீக சிறப்பு மிக்க மதுரை ஆதினத்தின் இளைய சன்னிதானமாக சுவாமிநாதனுக்கு, 293-வது பீடாதிபதி குருமகராஜ் சிவாய் சச்சிதானந்த பரமாச்சார்ய திருஞானசம்பந்த தேசிகர் என்ற பெயரிட்டு இளவரசுப் பட்டம் சூட்டப்பட்டது.
அவருக்கு மதுரை ஆதீனகர்த்தரான 292-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீல ஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், இளவரசு பட்டம் சூட்டினார்.
சுவாமிநாதன், திருநெல்வேலியைச் சேர்ந்த பொன். கோவிந்தசாமிப் பிள்ளை, சங்கரவடிவு ஆகியோரின் 2-வது மகன் ஆவார். இவர் பிளஸ் 1 படிப்பு முடித்திருக்கிறார்.
சுவாமிநாதன் இளைய சன்னிதானமாக தேர்ந்தெடுக்கப்பட்டது தொடர்பாக மதுரை ஆதீனம் கூறியதாவது: மரபு அடிப்படையில் பழனியில் ஓலைச் சுவடி மூலம் சுவாமிநாதன் 293-வது குருமகா சன்னிதானமாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இனி சாதி, சமய நல்லிணக்கத்திற்காக அவர் பாடுபடுவார். அஞ்சல் வழிக் கல்வி மூலம் தொடர்ந்து படிப்பார் என்றார்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications