தனியார் பொறியியல் கல்லூரிகளின் சேர ஜூலையில் நுழைவுத் தேர்வுசென்னை:தனியார் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அடுத்த மாதம் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என தமிழக தனியார் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.தனியார் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தனி நுழைவுத் தேர்வு நடத்திக் கொள்ள நீதிபதி சுப்பிரமணி கமிட்டி அண்மையில் அனுமதி அளித்தது. இதற்கான வழிறைகளையும், நெறிமுறைகளையும் அக்கமிட்டி அறிவித்ததுஇதையடுத்து தனி நுழைவுத் தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளை தனியார் பொறியியல் கல்லூகள் தொடங்கியுள்ளன.இதுகுறித்து கூட்டமைப்பின் தலைவர் ஜேப்பியார் செய்தியாளர்களிடம் பேசுகையில்,முன்னாள் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகத்தின் தலைவர் ராமே கெளட தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு பொறியியல் கல்லூரிகளின் மாணவர் இடங்களை நிரப்புவதற்கான பொது நுழைவுத் தேர்வை நடத்தும்.ஜூலை 15 முதல் 20ம் தேதிக்குள் நுழைவுத் தேர்வு நடக்கும். உச்சநீதிமன்றம் வரையறுத்துள்ள விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படும். இருப்பினும் நீதிபதி சுப்ரமணியம் கமிட்டி கூறியுள்ள சில விதிமுறைகள் குறித்து அவரிடம் விளக்கம் கேட்கவுள்ளோம்.தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்கள், விஜயவாடா மற்றும் எர்ணாகுளம் ஆகிய ஊர்களிலும் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்றார் ஜேப்பியார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தனியார் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அடுத்த மாதம் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என தமிழக தனியார் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

தனியார் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தனி நுழைவுத் தேர்வு நடத்திக் கொள்ள நீதிபதி சுப்பிரமணி கமிட்டி அண்மையில் அனுமதி அளித்தது. இதற்கான வழிறைகளையும், நெறிமுறைகளையும் அக்கமிட்டி அறிவித்தது

இதையடுத்து தனி நுழைவுத் தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளை தனியார் பொறியியல் கல்லூகள் தொடங்கியுள்ளன.

இதுகுறித்து கூட்டமைப்பின் தலைவர் ஜேப்பியார் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

முன்னாள் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகத்தின் தலைவர் ராமே கெளட தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு பொறியியல் கல்லூரிகளின் மாணவர் இடங்களை நிரப்புவதற்கான பொது நுழைவுத் தேர்வை நடத்தும்.

ஜூலை 15 முதல் 20ம் தேதிக்குள் நுழைவுத் தேர்வு நடக்கும். உச்சநீதிமன்றம் வரையறுத்துள்ள விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படும். இருப்பினும் நீதிபதி சுப்ரமணியம் கமிட்டி கூறியுள்ள சில விதிமுறைகள் குறித்து அவரிடம் விளக்கம் கேட்கவுள்ளோம்.

தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்கள், விஜயவாடா மற்றும் எர்ணாகுளம் ஆகிய ஊர்களிலும் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்றார் ஜேப்பியார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+