காங்கிரசில் இணைகிறது ப.சியின் காங். ஜனநாயக பேரவை
சென்னை:
மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை கலைக்கப்படுகிறது. அந்தக் கட்சி காங்கிரசில் இணைகிறது.
இக் கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் இன்று நடந்தது. சென்னையில் நடந்த இக் கூட்டத்தில் சிதம்பரம் பங்கேற்கவில்லை.
பட்ஜெட் தயாரிப்பில் அவர் மும்ரமாக இருப்பதால் அவரது சார்பில் அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் பங்கேற்று கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார்.- கூட்டத்துக்கு பொதுச் செயலாளர் வள்ளல் பெருமான் தலைமை வகித்தார்.
இக் கூட்டத்தில் கட்சியை காங்கிரசில் இணைப்பது என முடிவெடுக்கப்பட்டது.
1996ம் ஆண்டில் அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் அப்போதைய பிரதமர் நரசிம்மராவான் முடிவை எதிர்த்து மறைந்த மூப்பனார் தலைமையில் காங்கிரசில் இருந்து வெளியேறினார் ப.சிதம்பரம். பின்னர் அதே த.மா.கவுக்கும் அதிமுகவுக்கும் இடையே 2001ல் கூட்டணி ஏற்பட்டபோது அதை எதிர்த்து காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையை உருவாக்கினார்.
2001ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்த சிதம்பரம் இரு இடங்களில் தனது ஆட்களை நிறுத்தி வென்றார். அதில் ஒரு எம்.எல்.ஏவான புரசைவாக்கம் ரெங்கநாதன் திமுகவில் சேர்ந்துவிட்டார். வள்ளல் பெருமான் மட்டுமே சிதம்பரத்துடன் தொடர்ந்து துணை நின்றார்.
இந் நிலையில் காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிட்டு எம்பியாகி மத்திய நிதியமைச்சம் ஆகிவிட்ட சிதம்பரம் கட்சியைக் கலைத்துவிட்டு காங்கிரசிலேயே ஐக்கியமாக முடிவு செய்துவிட்டார்.
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications