கருணாநிதிக்கு எழும்பூர் நீதிமன்றம் சம்மன்சென்னை:சிறுபான்மையினர் நடத்திய கூட்டத்தில், இந்து என்றால் திருடன் என்று பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் வருகிற 15ம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகும்படி திமுக தலைவர் கருணாநிதி கருணாநிதிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.சென்னை வேப்பேரி ஆன்ட்ரூஸ் கிறிஸ்தவ ஆலயத்தில் கடந்த 2002ம் ஆண்டு ஜூன் மாதம் சிறுபான்மையினர் கூட்டம் நடந்தது. இதில் கருணாநிதி கலந்து கொண்டு பேசினார்.அந்தக் கூட்டத்தில் கருணாநிதி பேசியது தொடர்பாக சென்னை எழும்பூர் 14வது நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கோபிநாத் ஒரு மனுத் தாக்கல் செய்தார். அதில், இந்து என்றால் திருடன் என்று நல்லோர்கள் சொல்வார்கள் என கருணாநிதி பேசியது மதக் கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளது என்றும் இது குறித்துபோலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.இது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி எழும்பூர் போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து எழும்பூர் போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.இந் நிலையில், வரும் 15ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி குற்றபத்திரிக்கை நகலை பெற்றுக் கொள்ளும்படி கருணாநிதிக்கு சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.முத்து விழா வசூல் ரூ. 2 லட்சம் !திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி வைக்கப்பட்டிருந்த உண்டியலில் ரூ. 2.17 லட்சம் நிதி வசூலாகியுள்ளது.கருணாநிதி கடந்த 3ம் தேதி தனது 81வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதையொட்டி அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் அவர் தொண்டர்களைச் சந்தித்து வாழ்த்துக்களைப் பெற்றார். அப்போது மேடையில் நிதி வசூல் உண்டியலும் வைக்கப்பட்டிருந்தது.
சென்னை:
சிறுபான்மையினர் நடத்திய கூட்டத்தில், இந்து என்றால் திருடன் என்று பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் வருகிற 15ம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகும்படி திமுக தலைவர் கருணாநிதி கருணாநிதிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை வேப்பேரி ஆன்ட்ரூஸ் கிறிஸ்தவ ஆலயத்தில் கடந்த 2002ம் ஆண்டு ஜூன் மாதம் சிறுபான்மையினர் கூட்டம் நடந்தது. இதில் கருணாநிதி கலந்து கொண்டு பேசினார்.
அந்தக் கூட்டத்தில் கருணாநிதி பேசியது தொடர்பாக சென்னை எழும்பூர் 14வது நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கோபிநாத் ஒரு மனுத் தாக்கல் செய்தார்.
அதில், இந்து என்றால் திருடன் என்று நல்லோர்கள் சொல்வார்கள் என கருணாநிதி பேசியது மதக் கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளது என்றும் இது குறித்துபோலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி எழும்பூர் போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து எழும்பூர் போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
இந் நிலையில், வரும் 15ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி குற்றபத்திரிக்கை நகலை பெற்றுக் கொள்ளும்படி கருணாநிதிக்கு சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
முத்து விழா வசூல் ரூ. 2 லட்சம் !
திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி வைக்கப்பட்டிருந்த உண்டியலில் ரூ. 2.17 லட்சம் நிதி வசூலாகியுள்ளது.
கருணாநிதி கடந்த 3ம் தேதி தனது 81வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதையொட்டி அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் அவர் தொண்டர்களைச் சந்தித்து வாழ்த்துக்களைப் பெற்றார். அப்போது மேடையில் நிதி வசூல் உண்டியலும் வைக்கப்பட்டிருந்தது.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications