காவிரி நீரை பெறுவது சோனியா- கருணாநிதி பொறுப்பு: ஜெயலலலிதா
சென்னை:
காவிரி நீரை தமிழகத்துக்கு பெற்றுத் தருவது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரது பொறுப்பாகும் என்று முதல்வர் ஜெயலலிதா இன்று கூறியுள்ளார்.
காவிரி ஆணையத்தைக் கூட்ட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஜெயலலிதா நேற்று கடிதம் எழுதினார். இந் நிலையில் இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
காவிரி நதிநீரை கர்நாடகம் விடுவிக்கக் கோரி தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியைச் சேர்ந்த 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை சந்திப்பது எனவும், ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள் அடங்கிய குழு ஒன்று கர்நாடக முதல்வரைச் சந்தித்து உடனடியாக தமிழகத்திற்கு காவிரி நீரை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ள இருப்பதாகவும் ஜனநாயக முற்போக்கு கூட்டணி தலைவர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் அங்கம் வகித்தபோது கருணாநிதியோ, ராமதாசோ, வைகோவோ தமிழகத்திற்கு காவிரி நீர் பெறுவதற்காக ஒரு துரும்பைக் கூட அசைத்ததில்லை.
காவிரி நீர் தொடர்பாக நான் என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதனைக் குறை கூறுவதைத் தவிர வேறு எதுவும் செய்ததில்லை.
கடந்த 5 ஆண்டுகளில் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்திருந்த போதிலும், காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியாகாந்தி காவிரி நதிநீர் தொடர்பாக ஒரு சிறிய நடவடிக்கை கூட எடுக்கவில்லை.
திமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளும் காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்கு தொடர்ந்து இழைத்து வரும் துரோகத்தை நாங்கள் சுட்டிக் காட்டியபோதும், இக்கட்சிகளின் கூட்டணிக்கு மக்களவைத் தேர்தலில் பெருவாரியான வாக்குகளை தமிழக மக்கள் வழங்கினர்.
தற்போது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு மத்தியில் அமைந்துள்ளதாலும், கர்நாடகத்தில் மீண்டும் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவரே முதல்வராக உள்ளதாலும், காவிரி நீரில் தமிழ்நாட்டுக்குரிய பங்கைப் பெற்றுத் தரும் பொறுப்பு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சோனியாகாந்தி மற்றும் கருணாநிதியை சார்ந்துள்ளது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.
கர்நாடகத்தில் ஒரு தனிக் கட்சி ஆட்சி செய்தபோதே காவிரி நீர் கிடைக்காதபோது, ஒரு கூட்டணி அரசிடம் இருந்து எப்படி கிடைக்கும் என்று கேட்கப்பட்டபோது சாமுண்டீஸ்வரி அம்மனிடம் தான் கேட்டுக் சொல்ல வேண்டும் என்று கருணாநிதி கூறியிருக்கிறார்.
இத்தகைய இழிவான கருத்துக்களை கருணாநிதி தெரிவிப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னால் இந்து என்ற சொல்லுக்கு திருடன் என்று பொருள் கூறியிருக்கிறார்.
இந்தியாவின் பெரும்பான்மை மக்களான இந்துக்களின் நம்பிக்கைகளையும், உணர்வுகளையும் புண்படுத்தும் வகையில் கருணாநிதி தொடர்ந்து பேசி வருவது கண்டிக்கத்தக்கது என்பதை நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியால் அகந்தையும், கர்வமும் நிரம்பி வழியும் கருணாநிதிக்கு நான் தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.
கருணாநிதியின் கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்தவர்களில் பெரும்பாலோனோர் இந்துக்கள் எனும்போது, அவரது இத்தகைய தாக்குதல்கள் நன்றி கெட்டவையாகவும், இன்னும் அதிகமாக கண்டனத்திற்குரியதாகவும் ஆகின்றன என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications