பொடா சட்டம் விரைவில் வாபஸ்: பிரணாப் முகர்ஜி
சென்னை:
பொடா சட்டம் விரைவில் வாபஸ் பெறப்படும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று தெரிவித்தார்.
திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலினின் மகள் திருமணத்தில் கலந்து கொள்ள சென்னை வந்த பிரணாப் முகர்ஜி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
பொடா சட்டத்தை வாபஸ் வாங்குவது குறைந்தப்பட்ச தேசிய செயல் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் அது பற்றிய சட்டம் நிறைவேற்றிய பின்னர் பொடா சட்டம் நிச்சயம் வாபஸ் பெறப்படும். அதற்கான பணிகளை மத்திய அரசு விரைந்து செயல்படுத்தி வருகிறது.
இலங்கை வெளியுறவு அமைச்சர் கதிர்காமருடனான சந்திப்பின்போது, பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டு ராணுவ நடவடிக்கை பற்றி எந்த திட்டமும் உருவாக்கப்படவில்லை. அப்படி ஒரு ஒப்பந்தம் நிறைவேற்றப்படுமானால் அதற்கு முன்னர் கூட்டணிக் கட்சிகளிடமும் ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே திட்டம் வகுக்கப்படும்.
முன்னதாக விமான நிலையத்தில் அவரை மத்திய அமைச்சர்கள் டி.ஆர். பாலு, தயாநிதி மாறன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் உள்பட பலர் வரவேற்றனர்.












Click it and Unblock the Notifications