சுயநிதி கல்லூரி கட்டணங்களை குறைக்க கோரும் ராமதாஸ்
சென்னை:
சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி பாமக நிறுவனர் ராமதாஸ் சுவரொட்டி இயக்கம் தொடங்கினார்.
சேப்பாக்கம் வாலாஜா சாலை அருகில் சுவர்களில் சுவரொட்டிகளை அவரே ஒட்டினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
சுயநிதி பொறியியல் கல்லூரிகள் தனி நுழைவுத் தேர்வை நடத்த சுப்பிரமணி கமிட்டி அனுமதி வழங்கியுள்ளது சந்தேகம் அளிக்கிறது. ஏனெனில் சில சுயநிதிக் கல்லூரிகள் தங்களது நிர்வாக ஒதுகீட்டு இடங்களை ஏற்கெனவே நிரப்பி விட்டதாகவும், பெயரளவிலேயே நுழைவுத் தேர்வு நடத்தப் போவதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
கட்டண விகிதம் தொடர்பாக அமைக்கப்பட்ட ராமன் கமிட்டி இதுவரை செயல்பட்டதாகவே தெரியவில்லை. இது போன்ற மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க வலியுறுத்தி தொடர்ந்து சுவரொட்டி இயக்கங்களை பாமக நடத்தும் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications