அமெரிக்கா முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகன் மரணம்
வாஷிங்டன்:
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ரொனால்டு ரீகன் இன்று அதிகாலை மரணம் அடைந்தார்.
குடியரசு கட்சியை சேர்ந்த ரீகன் (93) ஹாலிவுட் நடிகர். கலிபோர்னியா மாகாண கவர்னர் ஆகி பிறகு 1981ம் ஆண்டு அமெரிக்காவின் 40வது அதிபராகப் பதவியேற்றார். அடுத்த தேர்தலிலும் வெற்றி பெற்று 1989 வரை அதிபர் பதவி வகித்தார்.
பதவியில் இருந்து ஓய்வு பெற்ற ரீகன் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள வசித்து வந்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அவர் புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார். மேலும் அல்சிமர்ஸ் என்ற நோயால் பீடிக்கப்பட்ட அவர் நரம்பு மண்டலமும், மூளை செல்களும் பாதிக்கப்பட்டு நினைவு இழந்த நிலையிலேயே படுக்கையில் இருந்தார்.
பிரான்சு நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வரும் இன்றைய அதிபர் ஜார்ஜ் புஷ்சுக்கு ரீகன் மரணம் அடைந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
ரீகன் உடல் கலிபோர்னியாவில் அருங்காட்சியகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து வாஷிங்டன் கொண்டு செல்லப்படுகிறது. அங்குள்ள தேவாலயத்தில் நடைபெறும் இறுதி சடங்கில் உலக தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துகிறார்கள்.
ரீகன் மரணத்தையொட்டி வெள்ளை மாளிகையில் அமெரிக்க தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.
-
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications