தலைவர்கள் வாழ்த்து; சோனியா கலந்து கொள்ளவில்லைசென்னை:திமுக துணைப் பொது செயலாளர் ஸ்டாலினின் மகள் திருமணத்தில் ஏராளமான தலைவர்கள் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர். ஸ்டாலினின் மகள் செந்தாமரைக்கும், -வேதமூர்த்தி என்பவரின் மகன் சபரீசனுக்கும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று காலை திருமணம் நடந்தது.திமுக தலைவர் கருணாநிதி முன்னிலை வகிக்க, திமுக பொதுச் செயலா ளர் அன்பழகன் தலைமை தாங்கினார். மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, தாசரி நாராயணராவ், ப. சிதம்பரம், டி.ஆர். பாலு, தயாநிதி மாறன், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன், எம்ஜிஆர் கழக தலைவர் ஆர்.எம். வீரப்பன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வரதராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் நல்லக்கண்ணு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் மொய்தீன், பேராயர் எஸ்றா. சற்குணம், சட்டசபை காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், பா.ம.க தலைவர் ஜி.கே. மணி, திமுக முன்னணி தலைவர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், நடிகர் சரத்குமார், நெப்போலியன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், இந்து ராம், கவிஞர் வாலி உள்பட ஏராளமானோர் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினர். குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் குடியரசு தலைவர் கே.ஆர். நாராயணன் ஆகியோர் வாழ்த்து செய்தி அனுப்பி இருந்தனர். திருமண விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்து கருணாநிதி பேசியதாவது:-கவிஞர் வாலி இங்கே பேசும்போது "திருக்குவளை சொல்லி, இனி தலையாட்டும் டெல்லி" என்றார். இதை நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூர்ந்து கவனித்து, இந்த மாநிலம் தழைக்க ஆவன செய்ய வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.என்னுடைய வீட்டில் ஒன்றிரண்டு திருமணங்களைத் தவிர, மற்ற எல்லா திருமணங்களும் காதல் திருமணங்கள் அல்லது கலப்புத் திருமணங்கள்தான்.என்னுடைய வீட்டில் தலித் மருமகளையும் பார்க்கலாம், தலித் மருமகனையும் பார்க்கலாம். செட்டியாரையும் பார்க்கலாம், அய்யரையும் பார்க்கலாம், அய்யங்காரையும் பார்க்கலாம். இதுவரை முதலியார் இல்லாத குறை இருந்தது. இன்று அந்தக் குறையும் நீங்கியது.இந்த விழாவிற்கு வந்து, மணமக்களை வாழ்த்திய அமைச்சர் பெருமக்கள், ஆன்றோர், சான்றோர், தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் அனைவருக்கும் இந்தக் குடும்பத்தின் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் கருணாநிதி.
சென்னை:
திமுக துணைப் பொது செயலாளர் ஸ்டாலினின் மகள் திருமணத்தில் ஏராளமான தலைவர்கள் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.
ஸ்டாலினின் மகள் செந்தாமரைக்கும், -வேதமூர்த்தி என்பவரின் மகன் சபரீசனுக்கும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று காலை திருமணம் நடந்தது.
திமுக தலைவர் கருணாநிதி முன்னிலை வகிக்க, திமுக பொதுச் செயலா ளர் அன்பழகன் தலைமை தாங்கினார். மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, தாசரி நாராயணராவ், ப. சிதம்பரம், டி.ஆர். பாலு, தயாநிதி மாறன், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன்,
மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன், எம்ஜிஆர் கழக தலைவர் ஆர்.எம். வீரப்பன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வரதராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் நல்லக்கண்ணு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் மொய்தீன்,
பேராயர் எஸ்றா. சற்குணம், சட்டசபை காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், பா.ம.க தலைவர் ஜி.கே. மணி, திமுக முன்னணி தலைவர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், நடிகர் சரத்குமார், நெப்போலியன்,
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், இந்து ராம், கவிஞர் வாலி உள்பட ஏராளமானோர் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினர். குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் குடியரசு தலைவர் கே.ஆர். நாராயணன் ஆகியோர் வாழ்த்து செய்தி அனுப்பி இருந்தனர்.
திருமண விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்து கருணாநிதி பேசியதாவது:-
கவிஞர் வாலி இங்கே பேசும்போது "திருக்குவளை சொல்லி, இனி தலையாட்டும் டெல்லி" என்றார். இதை நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூர்ந்து கவனித்து, இந்த மாநிலம் தழைக்க ஆவன செய்ய வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
என்னுடைய வீட்டில் ஒன்றிரண்டு திருமணங்களைத் தவிர, மற்ற எல்லா திருமணங்களும் காதல் திருமணங்கள் அல்லது கலப்புத் திருமணங்கள்தான்.
என்னுடைய வீட்டில் தலித் மருமகளையும் பார்க்கலாம், தலித் மருமகனையும் பார்க்கலாம். செட்டியாரையும் பார்க்கலாம், அய்யரையும் பார்க்கலாம், அய்யங்காரையும் பார்க்கலாம். இதுவரை முதலியார் இல்லாத குறை இருந்தது. இன்று அந்தக் குறையும் நீங்கியது.
இந்த விழாவிற்கு வந்து, மணமக்களை வாழ்த்திய அமைச்சர் பெருமக்கள், ஆன்றோர், சான்றோர், தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் அனைவருக்கும் இந்தக் குடும்பத்தின் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications