சென்னை துறைமுக ஊழியர் ஸ்டிரைக் வாபஸ்சென்னை:சென்னை துறைமுக சரக்குகள் கையாளும் ஊழியர்கள் கடந்த 15 நாட்களாக நடத்தி வந்த வேலைநிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.சென்னை துறைமுகத்தில் வந்திறங்கும் சரக்குப் பெட்டகங்களிலிருந்து (கண்டெயினர்கள்) சரக்குகளை எடுத்து வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் சிலரை சென்னை கண்டெய்னர் டெர்மினல் நிறுவனம் தற்காலிக பணி நீக்கம் செய்ததால் அனைத்து ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் குதித்தனர்.இந்த வேலைநிறுத்தத்தால் துறைமுகத்திற்கு வந்த 20,000க்கும் மேற்பட்ட கண்டெயினர்கள் தேங்கின. வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர நடந்த பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்தன. கிட்டத்தட்ட 2,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.இந் நிலையில் தொழிலாளர் பிரதிநிதிகளுக்கும், நிறுவனத்திற்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் வேலை தருவது, ஊழியர்களின் நலன் பாதிக்கும் படியான உத்தரவுகளை வாபஸ் பெறுவது என ஒப்பந்தம் ஆனது.இதையடுத்து ஊழியர்கள் நேற்று இரவு 10 மணி முதல் பணிக்குத் திரும்பினர்.
சென்னை:
சென்னை துறைமுக சரக்குகள் கையாளும் ஊழியர்கள் கடந்த 15 நாட்களாக நடத்தி வந்த வேலைநிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை துறைமுகத்தில் வந்திறங்கும் சரக்குப் பெட்டகங்களிலிருந்து (கண்டெயினர்கள்) சரக்குகளை எடுத்து வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் சிலரை சென்னை கண்டெய்னர் டெர்மினல் நிறுவனம் தற்காலிக பணி நீக்கம் செய்ததால் அனைத்து ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் குதித்தனர்.
இந்த வேலைநிறுத்தத்தால் துறைமுகத்திற்கு வந்த 20,000க்கும் மேற்பட்ட கண்டெயினர்கள் தேங்கின. வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர நடந்த பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்தன. கிட்டத்தட்ட 2,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.
இந் நிலையில் தொழிலாளர் பிரதிநிதிகளுக்கும், நிறுவனத்திற்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் வேலை தருவது, ஊழியர்களின் நலன் பாதிக்கும் படியான உத்தரவுகளை வாபஸ் பெறுவது என ஒப்பந்தம் ஆனது.
இதையடுத்து ஊழியர்கள் நேற்று இரவு 10 மணி முதல் பணிக்குத் திரும்பினர்.












Click it and Unblock the Notifications