டெல்லி செல்லும் எம்.பிக்கள் குழுவில் அதிமுகவும் பங்கேற்பு
சென்னை:
காவிரிப் பிரச்சினை தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை நாளை சந்திக்கச் செல்லும் தமிழக எம்.பிக்கள் குழுவில் அதிமுகவும் கலந்து கொள்ளும் என்று நிதியமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
திமுக தலைமையில் தமிழக எம்.பிக்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க டெல்லி செல்லவுள்ளனர். இந்தக் குழுவில் அதிமுகவும் கலந்துகொள்ள வேண்டும் என்று கோரி திமுக சட்டசபை துணைத் தலைவர் துரைமுருகன் முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கடிதம் எழுதியிருந்தார்.
அந்தக் கடிதத்திற்கு மாநில நிதியமைச்சர் பொன்னையன் பதில் அளித்துள்ளார். அதில், காவிரி விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, பிரதமர் மன்மோகன் சிங்கைப் பார்க்கச் செல்லும் தமிழக எம்.பிக்கள் குழுவில் அதிமுகவும் இடம்பெற ஜெயலலிதா முடிவு செய்துள்ளார்.
தமிழக எம்.பிக்கள் குழுவில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்பார்கள். இதுதொடர்பாக நாடாளுமன்ற அதிமுக தலைவர் பி.ஜி.நாராயணன் தங்களைத் தொடர்பு கொள்வார் என்று கூறப்பட்டுள்ளது.
திமுக தலைமையிலான எம்.பிக்கள் குழுவில் அதிமுகவும் கலந்து கொண்டிருப்பது தமிழக அரசியல் வரலாற்றில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளாக காவிரிப் பிரச்சினை தொடர்பாக அதிமுக எடுக்கும் முயற்சிகளுக்கு திமுக ஒத்துழைப்பு கொடுக்காது, அதேபோல, திமுக மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் அதிமுக பங்கேற்காது என்பது நினைவு கூறத்தக்கது.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications