அதிமுக தோல்விக்கு காரணம் என்ன?: சங்கராச்சாரியார் பதில்
மும்பை:
அதிமுகவின் தோல்விக்கு முதல்வர் ஜெயலலிதாவின் ஆணவமே காரணம் என்று காஞ்சி சங்கராச்சாரியார் கூறியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி படுதோல்வி அடைந்ததற்கு ஜெயலலிதாவின் ஆணவம்தான் காரணம். அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை அவர் கையாண்ட விதம் சரியில்லை. வெறும் பழிவாங்கும் நடவடிக்கையாக அது தரம் தாழ்ந்து விட்டது.
இதனால் அரசு ஊழியர் குடும்பங்கள் அதிமுகவுக்கு எதிராகத் திரும்பி விட்டன. ஜெயலலிதா பிறப்பித்த சட்டங்களில் டெஸ்மா சட்டம் தவிர, மதமாற்றத் தடை சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் சரியாக அமலாக்கப்படவே இல்லை.
இப்போது எல்லா சட்டங்களையும் வாபஸ் பெற்றுள்ளார். தேர்தலுக்கு முன்பு இதைச் செய்திருந்தால் கொஞ்சம் பலன் இருந்திருக்கும். ஜெயலலிதாவுக்கு இவ்வாறெல்லாம் ஆலோசனை கூறுவது யார் என்பது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.
அயோத்தி விஷயத்தில் நீதிமன்ற உத்தரவை ஏற்பதுதான் சரி என்று மத்திய உள்துறை அமைச்சசர் சிவராஜ் பாட்டீல் கூறுவது சரியல்ல. இது உணர்வுப்பூர்வமான விஷயம். இதிலெல்லாம் நீதிமன்றம் ஒருபோதும் முடிவு எடுக்காது என்றார் சங்கராச்சாரியார்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications