காவிரி: ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவோம்- கருணாநிதிசென்னை:காவிரிப் பிரச்சனையில் தனக்குள்ள கடமையை ஜனநாயக முற்போக்குக் கூட்டணி நிறைவேற்றும் என திமுக தலைவர் கருணாநிதி, முதல்வர் ஜெயலலிதாவுக்கு மறைகமாக பதில் அளித்துள்ளார்.காவிரியில் தமிழகத்திற்குய நீரைப் பெற்றுத் தர வேண்டிய பொறுப்பு திமுக தலைவர் கருணாநிதிக்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் அதிகம் உண்டு என்று முதல்வர் ஜெயலலிதா அறிக்கையில் நேற்று தெரிவிதிருந்தார்.இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, ஜெயலலிதாவின் அறிக்கைக்கு நேரடியாக பதில் தரவில்லை.அவர் பேசுகையில், காவிரிப் பிரச்சினையில், தனக்குள்ள கடமையை ஜனநாயக முற்போக்குக் கூட்டணி நிறைவேற்றும்.தமிழக எம்.பிக்கள் குழு பிரதமர் மன்மோகன் சிங்கை நாளை நேரில் சந்தித்து காவிரி டெல்டாவில் நிலவும் கவலைக்கிடமான சூழ்நிலையை எடுத்துக் கூறி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்வார்கள். இதில் தமிழக அனைத்துக் கட்சி எம்.பிக்களும் கலந்து கொள்வார்கள்.அதேபோல, ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகள் மட்டும் கர்நாடக முதல்வர் தரம்சிங்கை சந்தித்து இதே கோரிக்கையை வலியுறுத்துவார்கள் என்றார் கருணாநிதி.நிதியமைச்சர் பொன்னையன் எங்கள் தலைமைக் கழகச் செயலாளர் துரைமுருகனை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, பிரதமரை சந்திக்கும் குழுவில் பங்கேற்பது குறித்து அதிமுக ராஜ்யசபா எம்.பியான பி.ஜி.நாராயணன் டெல்லியில் எங்களைத் தொடர்பு கொள்வார் என்று கூறியுள்ளார்.இதேபோல, இந்து மதத்தை இழிவுபடுத்தும் விதத்தில் சாமுண்டீஸ்வரி அம்மனை கேலி செய்து கருணாநிதி பேசியுள்ளதாக ஜெயலலிதா கூறியுள்ளது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், நான் எந்த மதத்தையும் வெறுக்கவில்லை, எந்த மதத்திற்கும் நான் எதிரி அல்ல. அனைத்து மதங்களையும் மதிக்கிறேன். மத நல்லிணக்கத்தை விரும்புகிறேன் என்றார்.முன்னதாக, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.
சென்னை:
காவிரிப் பிரச்சனையில் தனக்குள்ள கடமையை ஜனநாயக முற்போக்குக் கூட்டணி நிறைவேற்றும் என திமுக தலைவர் கருணாநிதி, முதல்வர் ஜெயலலிதாவுக்கு மறைகமாக பதில் அளித்துள்ளார்.
காவிரியில் தமிழகத்திற்குய நீரைப் பெற்றுத் தர வேண்டிய பொறுப்பு திமுக தலைவர் கருணாநிதிக்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் அதிகம் உண்டு என்று முதல்வர் ஜெயலலிதா அறிக்கையில் நேற்று தெரிவிதிருந்தார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, ஜெயலலிதாவின் அறிக்கைக்கு நேரடியாக பதில் தரவில்லை.
அவர் பேசுகையில், காவிரிப் பிரச்சினையில், தனக்குள்ள கடமையை ஜனநாயக முற்போக்குக் கூட்டணி நிறைவேற்றும்.
தமிழக எம்.பிக்கள் குழு பிரதமர் மன்மோகன் சிங்கை நாளை நேரில் சந்தித்து காவிரி டெல்டாவில் நிலவும் கவலைக்கிடமான சூழ்நிலையை எடுத்துக் கூறி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்வார்கள். இதில் தமிழக அனைத்துக் கட்சி எம்.பிக்களும் கலந்து கொள்வார்கள்.
அதேபோல, ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகள் மட்டும் கர்நாடக முதல்வர் தரம்சிங்கை சந்தித்து இதே கோரிக்கையை வலியுறுத்துவார்கள் என்றார் கருணாநிதி.
நிதியமைச்சர் பொன்னையன் எங்கள் தலைமைக் கழகச் செயலாளர் துரைமுருகனை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, பிரதமரை சந்திக்கும் குழுவில் பங்கேற்பது குறித்து அதிமுக ராஜ்யசபா எம்.பியான பி.ஜி.நாராயணன் டெல்லியில் எங்களைத் தொடர்பு கொள்வார் என்று கூறியுள்ளார்.
இதேபோல, இந்து மதத்தை இழிவுபடுத்தும் விதத்தில் சாமுண்டீஸ்வரி அம்மனை கேலி செய்து கருணாநிதி பேசியுள்ளதாக ஜெயலலிதா கூறியுள்ளது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், நான் எந்த மதத்தையும் வெறுக்கவில்லை, எந்த மதத்திற்கும் நான் எதிரி அல்ல. அனைத்து மதங்களையும் மதிக்கிறேன். மத நல்லிணக்கத்தை விரும்புகிறேன் என்றார்.
முன்னதாக, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications