திடீர்.. திடீர்: பழநி கோயில் பஞ்சலோக சிலை அகற்றம்பழநி:பழநி கோயிலில்மூலவரை மறைத்து, புதிதாக வைக்கப்பட்ட பஞ்சலோக சிலையை தமிழக அரசு திடீரென அகற்றியுள்ளது.பழநி கோயில் மூலவர் சன்னதியில் நவபாஷான சிலையின் முன்பு கடந்த ஜனவரி மாதம் 25ம் தேதி திடீரென புதிய முருகன் சிலை ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. பஞ்சலோகத்தினால் செய்யப்பட்ட இந்த சிலை மூலவரை மறைக்கும் அளவிற்கு அமைக்கப்பட்டிருந்தது.இதனால், மூேலவரை தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. ஜோதிடர் யாரோ சொன்னதைக் கேட்டு தமிழக அரசு இந்தச் செயலைச் செய்ததாக புகார் எழுந்தது.மூலவரை மறைக்கும் இந்தப் புதிய சிலையை அகற்றக் கோரி பல்வேறு மடங்களும், பல்வேறு அமைப்புகளும், பக்தர்களும் போராட்டம் நடத்தின.ஆனால், அதற்கு அரசு அசைந்து கொடுக்கவில்லை. இந் நிலையில் இப்போது அந்தப் புதிய சிலை சிவாச்சார்யார்கள் முன்னிலையில் அதிகாரிகளால் திடீரென அகற்றப்பட்டுள்ளது.சமீபத்தில் அதிமுகவுக்கு தேர்தல் தோல்வி ஏற்பட்டதற்கும், இந்த சிலை அகற்றத்துக்கும் முடிச்சு போட்டு பழனி எங்கும் ஒரே பரபரப்பாக பேசப்படுகிறது.5 மாதங்களுக்கு முன் திடீரென சிலை வைக்கப்பட்டதற்கும், இப்போது திடீரென அகற்றப்பட்டதற்கும் தமிழக அரசிடம் இருந்து இதுவரை முறையான விளக்கம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to Oneindia Tamil

பழநி:

பழநி கோயிலில்மூலவரை மறைத்து, புதிதாக வைக்கப்பட்ட பஞ்சலோக சிலையை தமிழக அரசு திடீரென அகற்றியுள்ளது.

பழநி கோயில் மூலவர் சன்னதியில் நவபாஷான சிலையின் முன்பு கடந்த ஜனவரி மாதம் 25ம் தேதி திடீரென புதிய முருகன் சிலை ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. பஞ்சலோகத்தினால் செய்யப்பட்ட இந்த சிலை மூலவரை மறைக்கும் அளவிற்கு அமைக்கப்பட்டிருந்தது.

இதனால், மூேலவரை தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. ஜோதிடர் யாரோ சொன்னதைக் கேட்டு தமிழக அரசு இந்தச் செயலைச் செய்ததாக புகார் எழுந்தது.

மூலவரை மறைக்கும் இந்தப் புதிய சிலையை அகற்றக் கோரி பல்வேறு மடங்களும், பல்வேறு அமைப்புகளும், பக்தர்களும் போராட்டம் நடத்தின.

ஆனால், அதற்கு அரசு அசைந்து கொடுக்கவில்லை. இந் நிலையில் இப்போது அந்தப் புதிய சிலை சிவாச்சார்யார்கள் முன்னிலையில் அதிகாரிகளால் திடீரென அகற்றப்பட்டுள்ளது.

சமீபத்தில் அதிமுகவுக்கு தேர்தல் தோல்வி ஏற்பட்டதற்கும், இந்த சிலை அகற்றத்துக்கும் முடிச்சு போட்டு பழனி எங்கும் ஒரே பரபரப்பாக பேசப்படுகிறது.

5 மாதங்களுக்கு முன் திடீரென சிலை வைக்கப்பட்டதற்கும், இப்போது திடீரென அகற்றப்பட்டதற்கும் தமிழக அரசிடம் இருந்து இதுவரை முறையான விளக்கம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+