தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து; பொடா ரத்து: கலாம் அறிவிப்புடெல்லி:தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து (classical language)
டெல்லி:
தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து (classical language) வழங்கப்படும் என ஜனாதிபதி அப்துல் கலாம் இன்று அறிவித்தார். அதே போல பொடா சட்டம் ரத்து செய்யப்படும் என்றும் அறிவித்தார்.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் புதிய கூட்டணி அரசு அமைந்ததையடுத்து நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் இன்று கலாம் உரையாற்றினார். அப்போது புதிய அரசின் கொள்கைத் திட்டங்களை கலாம் வெளியிட்டார்.
அப்போது தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்படும் என்ற அறிவிப்பை கலாம் வெளியிட்டார். இதனை தமிழக எம்.பிக்கள் அனைவரும் மேஜைகளைத் தட்டி வரவேற்றனர்.
அகே போல அரசியல் சட்டத்தின் எட்டாவது பிரிவில் உள்ள நாட்டின் அனைத்து தேசிய மொழிகளையும் மத்திய அரசின் ஆட்சி மொழிகளாக்குவது குறித்து ஆராய உயர் மட்டக் குழு அமைக்கப்படும் என்றும் கலாம் அறிவித்தார்.
பொடா ரத்தாகும்:
மேலும் பொடா சட்டம் ரத்து செய்யப்படும் என்றும் அதே நேரத்தில் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் எந்தத் தொய்வும் இருக்காது என்றும் கலாம் அறிவித்தார். இருக்கும் சட்டங்களை வைத்தே தீவிரவாதத்தை ஒடுக்க முடியும் என்பதால் பொடா நீக்கப்படும் என்றார்.
இந்த அறிவிப்பை பா.ஜ.க. கூட்டணி மற்றும் அதிமுக தவிர்த்த பிற கட்சிகளின் எம்.பிக்கள் மேஜைகளைத் தட்டி வரவேற்றனர்.
தமிழில் கவிதை படித்த கலாம்:
முன்னதாக தனது உரையைத் தொடங்கிய கலாம், இன்று நான் வழக்கமாக காலை நடைபயணம் செய்த போது இறைவனிடம் வேண்டி கொண்டேன். அது என்ன தெரியுமா? என்று கேட்டுவிட்டு, தமிழில் கவிதையை படிக்கத் தொடங்கினார்.
இலட்சியக் கடலில் நீந்தும் 100 கோடி இந்திய மக்கள் அறிவுப் புதையல் பெறட்டும், இன்ப அமைதி பெறட்டும், இறைவா என வேண்டுவதாகச் சொல்லி உரையை வாசிக்க ஆரம்பித்தார்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications