தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு எதிராக பாமக போராட்டம்
சென்னை:
தனியார் பொறியியல் கல்லூரிகள் தனியாக நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தனியார் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கண்மூடித்தனமான கட்டணத்தை கண்டித்தும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான பாமகவினர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.மணி, நீதிபதி சுப்ரமணி கமிட்டி தனியார் பொறியியல் கல்லூரிகள் தனியாக நுழைவுத் தேர்வு நடத்த அனுமதி அளித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் நுழைவுத் தேர்வு நடத்திய பின்னர் தனியாக இன்னொரு நுழைவுத் தேர்வு நடத்துவது மாணவர்களிடையே பெரும் குழப்பத்தையும், லஞ்ச லாவண்யத்தையும் வளர்க்கவுமே உதவும்.
இந்தக் குழப்பத்திற்குக் காரணமான அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பாலகுருசாமியை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும். ஏழை, நடுத்தர மாணவ, மாணவிகள் பொறியியல் கல்லூரிகளில் படிக்கவே முடியாத அளவுக்கு கட்டண வசூல் இருக்கிறது.
கட்டண உயர்வை கட்டுப்படுத்தவும், புதிய கட்டணத்தை நிர்ணயிக்கவும் ராமன் கமிட்டி அனைக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையே தொடங்கிவிட்ட நிலையில் இன்னும் இந்தக் கமிட்டி தனது அறிக்கையைத் தரவில்லை. இதனால் அந்தக் கமிட்டியைக் கலைக்க வேண்டும்.
மகாராஷ்டிரத்தில் கட்டணம் கடந்த ஆண்டைவிட பாதி அளவாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழக அரசு இந்த விஷயத்தில் ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடவில்லை என்றார் மணி.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications