காவிரியில் தண்ணீர் வராததற்கு ஜெவே காரணம்: ராமதாஸ் குற்றச்சாட்டு
சென்னை:
காவிரியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தண்ணீர் வராததற்கு முதல்வர் ஜெயலலிதாவின் தவறான நடவடிக்கைகளே காரணம் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கச் செல்லும் தமிழக எம்.பிக்கள் குழுவில், அதிமுகவும் இடம் பெறும் என்று கூறிய முதல்வர் அக் குழுவில் இடம் பெற்றுள்ள திமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக கட்சிகள் மீது புகார்கள் கூறியுள்ளார்.
பிரச்சினையைத் தீர்க்க வேண்டி பிரதமருக்கு கடிதம் எழுதிவிட்டு, தமிழகத்திற்குத் தண்ணீர் பெற்றுத் தர வேண்டிய பொறுப்பு காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
காவிரியில் தண்ணீர் வரவேண்டும் என்ற அக்கறையை விட இந்தப் பிரச்சினையை அரசியலாக்கி, ஆதாயம் தேடும் முயற்சியே ஜெயலலிதாவிடம் உள்ளது. காவிரியில் கடந்த 2 ஆண்டுகளாக தண்ணீர் வராமல் போனதற்கு ஜெயலலிதாவின் கடந்த கால நடவடிக்கைகளே காரணம்.
இத்தகைய மோதல் போக்கைத் தவிர்த்துவிட்டு அனைத்துக் கட்சிகளையும் அரவணைத்துச் செயல்பட ஜெயலலிதா முன்வர வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications