பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். வகுப்புகளுக்கு தடை கோருகிறார் வீரமணிமதுரை: பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி வகுப்புகள் நடத்துவதை உடனடியாக மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் வீரமணி கோரியுள்ளார்.மதுரையில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:தமிழகத்துக்கான பல திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளன. இப்போது தமிழக எம்.பிக்கள் 12 பேர் மத்திய அமைச்சர்களாக உள்ளனர். அவர்களும், மற்ற தமிழக மக்களவை உறுப்பினர்களும் தமிழக நலனுக்காக இணைந்து செயல்பட வேண்டும். அதேபோல் மத்திய அரசுடன் தமிழக முதல்வர் ஜெயலலிதா இணைந்து செயல்பட வேண்டும்.தமிழைச் செம்மொழியாக அறிவிக்க மத்திய அரசு உடனடியாக ஆணை பிறப்பிக்க வேண்டும். பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி நடப்பதைத் தடை செய்ய வேண்டும்.அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. இதை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி ஒன்றைத் தொடங்கி இடஒதுக்கீடு முறையில் மாணவர்களைச் சேர்க்க வேண்டும்.இதை வலியுறுத்தி அடுத்த மாதம் 5-ம் தேதி தமிழக அரசு அலுவலகங்கள் முன்பாக திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கூறினார் வீரமணி.
மதுரை:
பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி வகுப்புகள் நடத்துவதை உடனடியாக மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் வீரமணி கோரியுள்ளார்.
மதுரையில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்துக்கான பல திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளன. இப்போது தமிழக எம்.பிக்கள் 12 பேர் மத்திய அமைச்சர்களாக உள்ளனர். அவர்களும், மற்ற தமிழக மக்களவை உறுப்பினர்களும் தமிழக நலனுக்காக இணைந்து செயல்பட வேண்டும். அதேபோல் மத்திய அரசுடன் தமிழக முதல்வர் ஜெயலலிதா இணைந்து செயல்பட வேண்டும்.
தமிழைச் செம்மொழியாக அறிவிக்க மத்திய அரசு உடனடியாக ஆணை பிறப்பிக்க வேண்டும். பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி நடப்பதைத் தடை செய்ய வேண்டும்.
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. இதை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி ஒன்றைத் தொடங்கி இடஒதுக்கீடு முறையில் மாணவர்களைச் சேர்க்க வேண்டும்.
இதை வலியுறுத்தி அடுத்த மாதம் 5-ம் தேதி தமிழக அரசு அலுவலகங்கள் முன்பாக திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கூறினார் வீரமணி.
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications