அரசு ஊழியர்கள் மீதான வழக்குகள் வாபஸ்
சென்னை:
வேலைநிறுத்தத்தின்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழக அரசு ஊழியர்கள் வேலை-நிறுத்தம் தொடங்கினர். இதைத் தொடர்ந்து அதிரடியாக ஒரே -நாளில் லட்சக்கணக்கான ஊழியர்களை பணியிலிருந்து நீக்கியது தமிழக அரசு. பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் மீது டெஸ்மா, எஸ்மா சட்டங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந் -நிலையில் மக்களவைத் தேர்தல் -முடிவு எதிரொலியாக தனது -நடவடிக்கைகள் அனைத்தையும் திரும்பப் பெற்று வருகிறார் -முதல்வர் ஜெயலலிதா. அதில், அரசு ஊழியர்கள் மீதான -நடவடிக்கைகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
அதன்படி தற்போது அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் கடைசியாக மிஞ்சியிருந்த வழக்குகளை வாபஸ் பெறும் பணியை அரசு தொடங்கியுள்ளது.
சென்னையில் 7,000 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது டெஸ்மா, எஸ்மாவின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. எழும்பூர், ஜார்ஜ் டவுண், சைதாப்பேட்டை நீதிமன்றங்களில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
இந்த வழக்குகளை வாபஸ் பெற அனுமதிக்குமாறு சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் மனு அளித்தனர். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்குகளை வாபஸ் பெற அனுமதி அளித்தனர்.
இதன் மூலம் சென்னை மாவட்டத்தில் சட்ட வழக்குகளை எதிர்கொண்டிருந்த அரசு ஊழியர்கள் விடுவிக்கப்பட்டு நிம்மதியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications