சுயநிதி கல்லூரிகளில் பி.இ. ஆண்டுக் கட்டணம் ரூ. 32,500சென்னை:தனியார் சுய நிதி பொறியியல் கல்லூரிகளில் மாணவ, மாணவர்களிடம் ஆண்டுக் கட்டணமாக ரூ. 32,500 வசூலிக்கலாம் என நீதிபதி ராமன் கமிட்டி பரிந்துரைத்துள்ளது.இதைவிடக் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம் என்று கமிட்டி அறிவித்துள்ளது.தனியார் எம்.பி.பி.எஸ், பொறியியல் கல்லூரிகளின் கட்டண விகிதத்தை நிர்ணயிக்க நீதிபதி ராமன் தலைமையில் கல்வியாளர்கள் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது.இந்தக் கமிட்டி தனியார் கல்லூரிகளிடம் கட்டண விகிதம் குறித்து அறிக்கை கோரியது. ஆனால், ஒரு கல்லூரியும் தனது கட்டண விவர அறிக்கையைத் தரவில்லை.இதையடுத்து கமிட்டி தானாகவே கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. இது குறித்து நிருபர்களிடம் இன்று ராமன் கூறியதாவது:தமிழகத்தில் உள்ள 226 தனியார் சுய நிதி பொறியியல் கல்லூரிகளிலும் ஆண்டுக் கட்டணமாக மாணவ, மாணவிகளிடம் ரூ. 32.500 வசூலிக்கலாம்.இவை தவிர மேலும் 40 கல்லூரிகள் சிறந்த கல்லூரிகளாக அங்கீகாரம் பெற்றுள்ளன. அங்கு கட்டணமாக ரூ. 40,000த்தை வசூலித்துக் கொள்ளலாம்.இதில் சேர்க்கைக் கட்டணம், டியூசன் பீஸ், சிறப்புக் கட்டணம், லேப் கட்டண், நூலக, கம்ப்யூட்டர், இன்டர்நெட், விளையாட்டு, வேலைவாய்ப்புப் பயிற்சிக் கட்டணம் ஆகியவையும் அடங்கும்.போக்குவரத்து மற்றும் விடுதி, உணவுக் கட்டணம் இதில் அடங்காது.மெரிட் மூலம் கல்லூரிகளில் இடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு மொத்தக் கட்டணத்தில் ரூ. 5,000 விலக்கு அளிக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளோம்.நாங்கள் நிர்ணயித்த கட்டணத்துக்கு மேல் வசூல் செய்யும் கல்லூரி நிர்வாகங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கலாம். அந்தக் கல்லூரிகளின் அங்கீகாரத்தையே ரத்து செய்யலாம். மேலும் அபராதமும் விதிக்கலாம்.இந்த புதிய கட்டண விவரம் 2006-2007ம் ஆண்டு வரை, அதாவது அடுத்த மூன்றாண்டுகளுக்கு அமலில் இருக்கும்.தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டண விவரத்தை சில நாட்களில் அறிவிப்போம் என்றார் நீதிபதி ராமன்.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தனியார் சுய நிதி பொறியியல் கல்லூரிகளில் மாணவ, மாணவர்களிடம் ஆண்டுக் கட்டணமாக ரூ. 32,500 வசூலிக்கலாம் என நீதிபதி ராமன் கமிட்டி பரிந்துரைத்துள்ளது.

இதைவிடக் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம் என்று கமிட்டி அறிவித்துள்ளது.

தனியார் எம்.பி.பி.எஸ், பொறியியல் கல்லூரிகளின் கட்டண விகிதத்தை நிர்ணயிக்க நீதிபதி ராமன் தலைமையில் கல்வியாளர்கள் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது.

இந்தக் கமிட்டி தனியார் கல்லூரிகளிடம் கட்டண விகிதம் குறித்து அறிக்கை கோரியது. ஆனால், ஒரு கல்லூரியும் தனது கட்டண விவர அறிக்கையைத் தரவில்லை.

இதையடுத்து கமிட்டி தானாகவே கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. இது குறித்து நிருபர்களிடம் இன்று ராமன் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள 226 தனியார் சுய நிதி பொறியியல் கல்லூரிகளிலும் ஆண்டுக் கட்டணமாக மாணவ, மாணவிகளிடம் ரூ. 32.500 வசூலிக்கலாம்.

இவை தவிர மேலும் 40 கல்லூரிகள் சிறந்த கல்லூரிகளாக அங்கீகாரம் பெற்றுள்ளன. அங்கு கட்டணமாக ரூ. 40,000த்தை வசூலித்துக் கொள்ளலாம்.

இதில் சேர்க்கைக் கட்டணம், டியூசன் பீஸ், சிறப்புக் கட்டணம், லேப் கட்டண், நூலக, கம்ப்யூட்டர், இன்டர்நெட், விளையாட்டு, வேலைவாய்ப்புப் பயிற்சிக் கட்டணம் ஆகியவையும் அடங்கும்.

போக்குவரத்து மற்றும் விடுதி, உணவுக் கட்டணம் இதில் அடங்காது.

மெரிட் மூலம் கல்லூரிகளில் இடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு மொத்தக் கட்டணத்தில் ரூ. 5,000 விலக்கு அளிக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளோம்.

நாங்கள் நிர்ணயித்த கட்டணத்துக்கு மேல் வசூல் செய்யும் கல்லூரி நிர்வாகங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கலாம். அந்தக் கல்லூரிகளின் அங்கீகாரத்தையே ரத்து செய்யலாம். மேலும் அபராதமும் விதிக்கலாம்.

இந்த புதிய கட்டண விவரம் 2006-2007ம் ஆண்டு வரை, அதாவது அடுத்த மூன்றாண்டுகளுக்கு அமலில் இருக்கும்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டண விவரத்தை சில நாட்களில் அறிவிப்போம் என்றார் நீதிபதி ராமன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+