போயஸ்கார்டன்...கெளடா.. திமுக...
பெங்களூர்:
பெங்களூரில் கர்நாடக முதல்வர் தரம்சிங்கை சந்தித்த திமுக தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு, மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் தேவே கெளடா, முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவையும் சந்தித்து காவிரியில் நீர் விட உதவுமாறு கோரிக்கை விடுத்தது.
தவே கெளடாவின் ஆதரவுசன் தான் கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை காங்கிரஸ் அமைத்துள்ளது. இதனால் கர்நாடக அரசு எடுக்கும் முக்கிய முடிவுகளில் தேவே கெளடாவின் பங்கு மிக அதிகமாக இருக்கும்.
நேற்று தரம்சிங்கை திமுக தலைமை நிலையச் செயலாளர் துரைமுருகன் தலைமையிலான குழு சந்தித்தபோது, துணை முதல்வரான சித்தராமையாவும் உடனிருந்தார். இவர் கெளடாவின் கட்சியைச் சேர்ந்தவர்.
சமீபத்தில் கெளடாவின் மகன் சென்னைக்கு வந்ததாகவும், அவரை போயஸ் கார்டனுக்கு நெருக்கமான பெரியகுளம் முன்னாள் பிரமுகர் சந்தித்துப் பேசியதாகவும் கூறப்படுகிறது.
காவிரி விவகாரத்தில் திமுகவின் நெருக்குதல்களுக்குப் பணிய வேண்டாம் என்று போயஸ் கார்டன், கெளடாவின் மகனிடம் சொல்லி- கவனித்தும் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
இந்த விவரம் திமுகவுக்கும் தெரியவந்ததையடுத்தே கெளடாவையும் சந்திக்கச் சொல்லி துரைமுருகனுக்கு அக் கட்சியின் தலைவர் கருணாநிதி உத்தரவிட்டதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அப்படியே மரியாதை நிமித்தமாக கிருஷ்ணாவையும் சந்தித்து நீர் கிடைக்கச் செய்ய உதவுமாறு கூறிவிட்டுத் திரும்பியுள்ளது திமுக தலைமையிலான எதிர்க் கட்சிக் குழு.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications