தூத்துக்குடி நகராட்சியில் அதிமுக-திமுக கவுன்சிலர்கள் அடிதடி: 5 பேர் கைது
தூத்துக்குடி:
தூத்துக்குடி நகராட்சியில் அதிமுக, திமுக கவுன்சிலர்கள் இடையே அடிதடி, சண்டை நடந்தது.
நாற்காலிகள், பேப்பர் வெயிட்டுகளால் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டதில் அதிமுக கவுன்சிலரின் மண்டை உடைந்தது. இச் சம்பவம் தொடர்பாக 5 கவுன்சிலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நகராட்சியின் அவைக் கூட்டம் தொடங்கியவுடனேயே வாக்குவாதம் வெடித்தது. தீர்மானங்கள் நிறைவேற்றுவது தொடர்பாக இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தனர்.
இது வாக்குவாதமாக மாறியது. சிறிது நேரத்தில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். நாற்காலிகளை தூக்கி வீசியதோடு, பேப்பர் வெயிட்டுகளையும் எறிந்தனர்.
இதில் அதிமுக கவுன்சிலரான ஜெயக்குமார் என்பருக்கு மண்டை உடைந்த ரத்தம் கொட்டியது. உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
சம்பவம் குறித்து நகராட்சித் தலைவர் டேனியேல் ராஜ் போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து இரு தரப்பையும் சேர்ந்த 5 கவுன்சிலர்களை போலீசார் கைது செய்தனர். இந்த 5 பேரும் அவையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications