தமிழகத்திற்கு கர்நாடகம் தண்ணீர் தரலாம்: மத்திய குழு
டெல்லி:
தமிழகத்திற்கு நல்லெண்ண அடிப்படையில் கர்நாடகம் தண்ணீர் தரலாம் என்று மத்திய நிபுணர் குழு கூறியுள்ளது.
காவிரிப் பிரச்சினை தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை தமிழக அனைத்துக் கட்சி எம்.பிக்கள் குழு சந்தித்துப் பேசியது. இதைத் தொடர்ந்து 3 பேர் கொண்ட நிபுணர் குழுவை மன்மோகன் சிங் நியமித்தார். இந்தக் குழு கர்நாடகத்தில் உள்ள அணைகள் மற்றும் தமிழகத்தின் மேட்டூர் அணை ஆகியவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்தது.
இதைத் தொடர்ந்து தனது அறிக்கையை இக்குழு பிரதமரிடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையில், தமிழகத்திற்கு நல்லெண்ண அடிப்படையில் தண்ணீர் விடலாம் என்று பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
மேட்டூரை விட கர்நாடக அணைகளில் அதிக நீர் இருப்பதாக நிபுணர் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. நடுவர் மன்ற இடைக்கால உத்தரவுப்படி கர்நாடகம் உரிய நீரை விடுவித்திருந்தாலும் கூட அது தேவையில்லாத காலத்தில் திறந்து விடப்பட்டுள்ளது.
எனவே தற்போது தமிழகத்தின் நிலையைக் கணக்கில் கொண்டு மனிதாபிமான, நல்லெண்ண அடிப்படையில், கர்நாடகம் தண்ணீர் திறந்து விடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த அறிக்கை குறித்து விரைவில் காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. அதன் பிறகு தேவைப்பட்டால் காவிரி நீர் ஆணையக்கூட்டம் கூட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications